சக்ரா படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த ரெஜினா கசாண்ட்ரா.!
சக்ரா படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த ரெஜினா கசாண்ட்ரா.!

தற்போது நடிகர் விஷால் நடித்து கொண்டிருக்கும் படம் சக்ரா. இந்த படத்தை எம்.எஸ் ஆனந்தன் இயக்கி வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அதிகபட்சமாக முடிவு அடைந்துள்ளது. இந்த ஊரடங்கு சமயத்தில் போஸ்ட் புரடொக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர் மற்றும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். #Vishal Actor Vishal
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் 4 மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் விஷால் நடித்த இரும்புத்திரை படம் போலவே விறுவிறுப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார் என தகவல் கசிந்துள்ளது. மேலும், இந்த படத்தில் மெயின் வில்லன் கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. கிளைமேக்ஸில் விஷாலுக்கும் ரெஜினாவிற்கும் இடையேயான சண்டை காட்சியும் உள்ளது என கூறப்படுகிறது.