கொரோனாவால் சன் டிவி எடுத்த அதிரடி முடிவு - இல்லத்தரசிகள் வருத்தம்..!
கொரோனாவால் சன் டிவி எடுத்த அதிரடி முடிவு - இல்லத்தரசிகள் வருத்தம்..!

இன்று பல சேனல்களில் பல நாடகங்கள் வந்தாலும் மனம் கவர்ந்த பல சீரியல்களை தமக்கு தந்த ஒரே சேனல் சன் டிவி மட்டும்தான். அப்படி ஒளிபரப்பான நாடகங்களில் ஆறு வருடங்கள் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கின்றன. தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக சின்னத்திரை மிகவும் ஆபத்தான நிலமை போய்க்கொண்டிருக்கிறது.
பல்வேறு நிபந்தனைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்திருந்தாலும், குறைந்த வேலையாட்களை வைத்து சீரியல்களை முழுமையாக எடுக்க முடியவில்லை. இதனால் இயக்குனர்களுக்கு அதிக அளவில் பொருள் செலவு ஆகிறது. இந்நிலையில் சன் டிவி பல நாடகங்களை நிறுத்த முடிவெடுத்துள்ளது.அழகு, கல்யாண பரிசு, சாக்லேட் ஆகிய சீரியல்களை சன் டி.வி. ஏற்கனவே ட்ராப் செய்துவிட்டது. இது தவிர மற்றொரு சீரியலையும் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாகவே அழகு சீரியலை நிறுத்தியது இல்லத்தரசிகளுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு நாடகம் நிறுத்தப்படும் என ஆனால் இல்லத்தரசிகளுக்கு மிகவும் ஆழ்ந்த வருத்தத்தில் கொண்டு சென்றுவிட்டது.இருப்பினும் இதே குழுவுடன் புதிய சீரியலை தொடரவும் சன் டி.வி. முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.