சீனாவின் டிக்டாக்குக்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகம் செய்த தமிழக இளைஞர்கள் - அசத்தலான செயலி.!
சீனாவின் டிக்டாக்குக்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகம் செய்த தமிழக இளைஞர்கள் - அசத்தலான செயலி.!

சீனா நாட்டின் டிக்டாக்குக்குக் மாற்றாக புதிய செயலியை அறிமுகப்படுத்திய திருப்பூர் பட்டதாரி இளைஞர்கள். அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.
கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய சீன எல்லைப் பகுதியில் இரு ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றமான நிலைமை நிலவியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சீனா நாட்டின் டிக் டாக் உள்பட 59 செயலிகளை தடை செய்தது.
இதையடுத்து யாரும் புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் இருந்தனர். இந்தியாவில் டிக்டாக் செயலி அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், டிக்டாக்குக்கு மாற்றாக பல செயலிகள் இருந்தாலும் அவை டிக் டாக் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடிக்க வில்லை.
தற்போது டிக்டாக்குக்கு மாற்றாக திருப்பூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இணைந்து சில்5 (chill5) என்கிற செயலியை வடிவமைத்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த ஹரிஷ் குமார், சௌந்தர குமார், சந்தீப், கோகுல், வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் இணைந்து இந்த செயலியை வடிவமைத்துள்ளனர். இந்த செயலி பார்ப்பதற்கு டிக் டாக் போலவே அனைத்து செயல்பாடுகள் உள்ளது என கூறப்படுகிறது.
இந்தச் செயலியை தமிழக இளைஞர்கள் வடிவமைத்து உள்ளதால், இதை மேம்படுத்த பயனாளர்கள் கூறும் புகார்களை உடனடியாக சரி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கான சர்வர் தளம் மிக பாதுகாப்பாகவும் மற்றும் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.