இந்திய அணியின் சிறந்த கேப்டன் சவுரவ் கங்குலி தான் - வாசிம் ஜாபர்.!
இந்திய அணியின் சிறந்த கேப்டன் சவுரவ் கங்குலி தான் - வாசிம் ஜாபர்.!

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக சௌரவ் கங்குலி தேர்ந்தெடுக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர். இவர் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 1,944 ரன்கள் அடித்து உள்ளார். இதனைத் தவிர ரஞ்சி கோப்பையில் 12,038 ரன்கள் அடித்த முதல் வீரர். கடந்த 2000ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி சச்சின், டிராவிட், கங்குலி ஆகிய மூவரின் தலைமையில் விளையாடியுள்ளார்.
இந்த மூன்று கேப்டன்களில் யார் சிறந்த கேப்டன் என வாசம் ஜாபரிடம் கேட்டபோது: நான் விளையாடிய கேப்டன்களில் சிறந்தவர் சவுரவ் கங்குலி தான். ஏனென்றால் கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் சிறந்த இந்தியா அணியை உருவாக்கினார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பையும் மற்றும் ஆதரவையும் கொடுத்தார்.
வீரேந்திர சேவாக் துவக்க ஆட்டக்காரராக ஆனது கங்குலி தான் காரணம். மேலும், ஜாகிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகிய மூன்று திறமையான வீரர்களை இந்தியா அணிக்கு அழைத்து வந்தார்.
இவ்வாறு வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.