தல அஜித் குறித்து ட்வீட் செய்த நடிகர் பிரசன்னா அப்படி என்னவாக இருக்கும்..???
தல அஜித் குறித்து ட்வீட் செய்த நடிகர் பிரசன்னா அப்படி என்னவாக இருக்கும்..???

தல அஜித் குறித்து தற்போது நடிகர் பிரசன்னா விடுத்திருக்கும் ட்வீட் தற்பொழுது சமூக வலைத்தளங்களில்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து இருக்கும் படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அஜித் தமிழ் சினிமாவில் வந்து 28 வருடங்கள் ஆன நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து விதமாகப் பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் #28YrsOfAjithismCDPBlast# என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதனுடன் பல பிரபலங்கள் CDP மூலம் பலர் வாழ்த்துக்களை வெளியிடவும் செய்தனர்.
அந்த வகையில் தல அஜித்தின்
CDP-யை வெளியிட்ட நடிகர் பிரசன்னா அவர் பதிவிட்டு இருப்பது ஒரு நடிகராக வேண்டும் என்ற எனது கனவை வலுப்படுத்திய ஒரு பெயர்.தோல்விகளுடன் என்னை முன்னேற தூண்டிய பெயர். கடினமான காலங்களில் என்னை தாங்கி பிடித்த பெயர். ஒருபோதும் பின்வாங்கி விடாமல் என்னை ஒரு போராளியாக மாற்றும் ஒரு பெயர் என தல அஜித்தை பற்றி பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு தல அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.