Kathir News
Begin typing your search above and press return to search.

சாலையில் சிலம்பம் சுற்றி வந்த மூதாட்டிக்கு உதவி செய்யும் சோனு சூட்!!!

சாலையில் சிலம்பம் சுற்றி வந்த மூதாட்டிக்கு உதவி செய்யும் சோனு சூட்!!!

சாலையில் சிலம்பம் சுற்றி வந்த மூதாட்டிக்கு உதவி செய்யும் சோனு சூட்!!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 11:00 AM GMT

நடிகர் சோனு சூட் தற்போது கொரோனா காரணமாக அதிக உதவிகள் செய்து வருகிறார்.

மேலும் இவர் உதவி செய்யும் நோக்கத்தில் சாலையில் ஒரு மூதாட்டி தன் வயிற்றுப் பிழைப்பிற்காக சிலம்பம் சுற்றி வந்தார்.

அதை ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் இரண்டு நாட்களாக மிகவும் பரவலாக பரவி வருகிறது.

அதனைப் பார்த்த சோனு சூட் மற்றும் ரிதேஷ் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வந்துள்ளனர்.

இது குறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, 'அவரை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

மேலும் அந்த மூதாட்டியின் அவரோடு சேர்ந்து ஒரு சிறிய பயிற்சி பள்ளி தொடங்கி நம் நாட்டு பெண்களுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

அதே போல நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் அந்த மூதாட்டியை பற்றிய தகவல்களை ட்விட்டர் மூலம் கேட்டறிந்து அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேலும் அந்த மூதாட்டியின் பெயர் ஆகியன தெரிய வந்துள்ளன. எனவே அந்த மூதாட்டியின் பெயர் ஷாந்தா பவார் என்பதும் அவர் புனேவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News