கொரானா வைரஸ் தொற்றிலிருந்து குணமான பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.!
கொரானா வைரஸ் தொற்றிலிருந்து குணமான பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.!

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிற்கு ஜீலை 7ந் தேதி COVID-19 தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இப்போது இரண்டு வாரங்களுக்கு மேலான பிறகு நெகட்டிவ் முடிவு பரிசோதனையில் வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
கொரனா வைரஸ் தொற்றின் மீதே சந்தேகம் கொண்ட பிரேசில் ஜனாதிபதி (ஜீலை 25) சனிக்கிழமை, அல்வோராடா அரண்மனையில் காலை உணவு உட்கொள்வது போல் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் ஹைட்ராக்ஸின் குளோரோகுயின் மருந்து பெட்டியுடன் காட்சியளித்தார். COVID-19 இல் இருந்து குணமடைய அம்மருந்து தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதாகவும் பின்னர் அல்வோராடா அரண்மனையில் தனிமைபடுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அதிகாரபூர்வ அறிக்கையின் படி, போல்சனாரோ 18 நாட்களில் நான்கு பரிசோதனை மேற்கொண்டதாகவும் அதில் மூன்று முறை பாசிட்டிவ் முடிவு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரனா பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்நாட்டில் 2,394,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 86,449 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையிலும் போல்சனாரோ வைரஸ் பாதிப்பைகாட்டிலும், ஊரடங்கால் உருவாகும் பொருளாதார பாதிப்பே அதிகமுள்ளது என வாதிடுகிறார். மேலும் ஊடகங்கள் பீதியை பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
source: https://swarajyamag.com/insta/brazil-president-bolsonaro-recovers-from-covid-19-had-tested-positive-for-the-virus-on-7-july