Kathir News
Begin typing your search above and press return to search.

பாலா படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனியா? வடகறி - சக்கரை பொங்கல் காமினேஷன் செட்டாகுமா?

பாலா படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனியா? வடகறி - சக்கரை பொங்கல் காமினேஷன் செட்டாகுமா?

பாலா படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனியா? வடகறி - சக்கரை பொங்கல் காமினேஷன் செட்டாகுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 10:06 AM GMT

இயக்குனர் பாலா அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் பாலா தன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடிக்க அழைக்க மாட்டாரா என நடிகர்கள் ஏங்கினர். அந்த அளவுக்கு அவர் படங்களில் நடிகர்களை சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடிக்க வைப்பார்.

விக்ரம், சூர்யா, சங்கீதா, ஆர்யா மற்றும் அதர்வா போன்ற நடிகர்களை ஸ்டாராக்கியதே பாலாவின் படங்கள்தான். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக திரையில் ஓடி மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படங்களை எப்போது பார்த்தாலும் முதல் தடவை பார்ப்பது போல இருக்கும். அந்த கதையில் வரும் வசனங்களும் காட்சிகளும் பார்ப்பவரின் மனதை கொள்ளையடிக்கும்.

ஆனால் இப்போது நிலைமை வேறு கடைசியாக அவர் இயக்கிய படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தன. அதனால் அவர் தூக்கிவிட்ட ஹீரோக்களே கூட அவருக்கு கால்ஷீட் கொடுக்காமல் ஓடி ஒளிந்தனர்.

இந்நிலையில் இசையமைப்பாளராக சினிமாத்துறையில் வலம் வந்தவர். தற்போது அதிக படங்கள் கதாநாயகன் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பாலா இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் எல்லா கதைகளிலும் ஒரே மாதிரியாக ரியாக்சன் கொடுக்கும் விஜய் ஆண்டனி தற்போது பாலா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது வடகறியும், சக்கரை பொங்கலும் கலந்த காம்பினேஷன் ஆக உள்ளது. இவர்கள் காம்பினேஷன் திரையில் வந்ததற்கு அப்புறம் தான் படம் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.

இது குறித்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் படம் எப்படி வரப்போகுது என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News