Kathir News
Begin typing your search above and press return to search.

உலகமெல்லாம் கொரோனாவால் தவிக்க, சீன தலை நகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு கூட பாதிப்பில்லை - கெடுபிடிகள் தான் காரணம் எனக் கூறும் அதிகாரிகள்.!

உலகமெல்லாம் கொரோனாவால் தவிக்க, சீன தலை நகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு கூட பாதிப்பில்லை - கெடுபிடிகள் தான் காரணம் எனக் கூறும் அதிகாரிகள்.!

உலகமெல்லாம் கொரோனாவால் தவிக்க, சீன தலை நகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு கூட பாதிப்பில்லை - கெடுபிடிகள் தான் காரணம் எனக் கூறும் அதிகாரிகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 July 2020 5:43 AM GMT

இது குறித்து பெய்ஜிங் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: வூஹானில் முதல்கட்டமாக தொற்று பரவி உச்சகட்டத்தில் இருந்த போதே பெய்ஜிங் நகர அதிகாரிகள் மிகவும் உஷாராகி விட்டனர். முதலில் ஊரடங்கை மிக சிறப்பாக செயல்படுத்தினோம், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள்,திரையரங்குகள் எல்லாமே மூடப்பட்டன. ஒரு வீட்டில் இருந்து நாளொன்றுக்கு ஒருவர், ஒரு முறைமட்டுமே வெளியே வரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

தீவிரமாக கண்காணிக்கப்பட்டதால் மக்கள் மிக சரியாக கடைபிடித்தனர். அதனால் ஆரம்பத்திலேயே முளையிலேயே கிள்ளி எறிந்தோம். என்றாலும் இரண்டாம் கட்டப் பரவல் மே மாத கடைசியில் சில மாகாணங்களில் தலை காட்டிய சமயத்தில் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்தசில நாட்களாக கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியிருப்பது ஒரு நபர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் ஒரு இறைச்சிக் கடையில் இருந்துதான் என தெரியவந்ததும் மீண்டும் முன்புபோலவே கடுமையான ஊரடங்கு போடப்பட்டது.

புதிய கரோனா பரவல் தொடங்கியப் பிறகு கூட அதனால்தான் பெய்ஜிங்கில் இன்று வரை யாருக்கும் கரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. கரோனா அறிகுறி இல்லாத ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது ஆனால் இதனை நாங்கள் தொற்றில் சேர்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஜூன் 11 ஆம் தேதி முதல் பெய்ஜிங் அதிகாரிகள் தங்கள் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். இதன் விளைவாக தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாகவும் கூறினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News