Kathir News
Begin typing your search above and press return to search.

"காஃபிர்களைத் துரத்துங்கள்!" "இந்து பெண்களை தூக்கிச் செல்லுங்கள்" - என்னதான் நடந்தது டெல்லி கலவரத்தில்?

"காஃபிர்களைத் துரத்துங்கள்!" "இந்து பெண்களை தூக்கிச் செல்லுங்கள்" - என்னதான் நடந்தது டெல்லி கலவரத்தில்?

காஃபிர்களைத் துரத்துங்கள்! இந்து பெண்களை தூக்கிச் செல்லுங்கள் - என்னதான் நடந்தது டெல்லி கலவரத்தில்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2020 11:49 AM GMT

டெல்லியில் நடந்த இந்துக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட வன்முறையில் தில்பர் நெகி என்ற 20 வயது இளைஞர் கடந்த பிப்ரவரி 24 அன்று உயிருடன் எரிக்கப்பட்டார். ஷிவ் விகார் என்ற சிறிய பகுதியில் இந்த சம்பவத்தைப் போல் பல வன்முறைகள் நிகழ்ந்த நிலையில் அவற்றின் மீது இதுவரை பத்து குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நெகி கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின் முற்றிலுமாக எரிந்து போன அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வு முடிவுகளில் இருந்து பின்வரும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்தது; இரு கால்களையும் காணவில்லை; மண்டை ஓடே தெரியுமளவுக்கு தலை எரிந்து போயிருந்தது. இரு நுரையீரல்களும் கல்லீரலும் கடினப்பட்டுப் போய் உறைந்திருந்தன.

நெகி வேலை பார்த்து வந்த ஸ்வீட் கடையின் உரிமையாளர் அனில் குமார் அந்தக் கடையைக் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வழக்கம் போல மதியம் 1.30 மணியைப் போல் மதிய உணவு உண்ட பிறகு கடையின் குடவுனில் ஓய்வெடுக்க சென்றிருக்கிறார். அரை மணி நேரத்திற்கு பிறகு கடையில் இருந்த அனில் குமாரும் பிற பணியாளர்களும் வெளியே கற்கள், கம்புகள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒரு முஸ்லிம் கும்பல் வருவதைப் பார்த்துள்ளனர்.

"அந்த கும்பலில் இருந்தவர்கள் 'காஃபிர்களை இந்த நாட்டை விட்டு துரத்தி விடுவோம்; காஃபிர்களைக் கொன்று விட்டு இந்துக்களின் பெண் குழந்தைகளை இழுத்துச் செல்வோம்' என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். இந்துக்களை தரக்குறைவாக பேசியதோடு 'இந்து முராதாபாத்' என்றும் கோஷம் எழுப்பினர்" என்று அனில் குமார் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

மற்றொரு சாட்சியும் இதே போன்று வாக்குமூலம் அளித்துள்ளார். "இந்துக்களைத் துரத்தி விட்டு அவர்களின் அன்னையரையும் மகள்களையும் எடுத்துக் கொள்வோம் என்று கத்திக் கொண்டு இருந்தனர்" என்று ஒருவர் சாட்சி கூறியதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பல் கடைக்கு அருகில் வந்த போது அனிலும் அவரது பணியாளர்களும் ஷட்டரை மூடிவிட்டு கடைக்குள்ளே ஒளிந்து கொண்டனர். ஒரு மணி நேரம் கழித்து நிலைமை சற்று சரியனது போல் தெரிந்த நிலையில் அவர்கள் அனைவரும் வெளியே வந்து ரோட்டுக்கு அந்தப்பக்கம் இருந்த அனிலின் சகோதரர் வைத்திருந்த பால் பொருட்கள் கடைக்குச் சென்றுள்ளனர். அந்தக் கடைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக் மற்றும் ஸ்கூட்டிக்கு வன்முறைக் கும்பல் தீ வைத்திருந்தது. அந்தத் தீயை அணைத்து விட்டு கடைக்குள் மாட்டிக் கொண்ட அனிலின் சகோதரரையும் அவரது மகனையும் மீட்டுள்ளனர்.

பின்னர் அந்தக் கடையின் மாடிக்குச் சென்ற போது அனிலின் ஸ்வீட் கடை மற்றும் குடவுனை சூறையாடிக் கொண்டும் மாடியில் இருந்து பிறர் மீது கற்களை வீசிக் கொண்டும் இருந்த வன்முறைக் கும்பலை அனில் குமாரின் சகோதரர் மகன் வீடியோ எடுத்துள்ளார்.

"என்னிடம் வேலை செய்த மகேஷிடம் நமதூ ஆட்கள் யாராவது குடவுனில் இருக்கிறார்களா என்று கேட்டேன். அவர் தில்பர் நெகி உள்ளே இருக்கலாம் என்று கூறினார்" என்று அனில் குமார் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். தனது கடைக்கு வன்முறைக் கும்பல் தீ வைத்ததைப் பார்த்த அனில் காவல்துறையை அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வரவில்லை.

வன்முறைக் கும்பலில் தனக்குத் தெரிந்தவர்கள் இருந்ததாக கூறிய அனில் அவர்களில் சிலரை அடையாளம் கண்டுள்ளார். குடவுனுக்கு அருகில் கடை வைத்திருந்த ஷாநவாஸ், அனில் கடைக்கு பக்கத்து கடை உரிமையாளரின் மகன் மற்றும் இன்னும் சிலரை அவர் அடையாளம் காட்டியுள்ளார். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு 7.30 மணி வாக்கில் அனில் தனது வீட்டுக்குச் சென்று விட்டார். பின்னர் 9 மணி அளவில் அவரை வாட்ஸாப்பில் அழைத்து அவரது நண்பர் ஷாநவாஸும் அவனது கூட்டாளிகளும் அனில் குமாருடைய குடவுனை தீயிட்டு கொளுத்துவதாக கூறியுள்ளார். அனில் குமாரின் குடவுனுக்கு அருகில் கடை வைத்துள்ளவர்கள் மற்றும் குடியிருப்பவர்களின் வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஷாநவாஸும் அவனது ஆட்களும் குடவுனக்கு தீ வைத்ததைப் பார்த்ததாகக் கூறியிருக்கிறார்கள்.

தில்பர் நெகியின் செல்ஃபோன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் அவரது அமைப்புகளைச் சோதித்த போது மகேஷ் யாதவ் என்ற சக பணியாளரிடம் 9.07 மணிக்கு அவர் பேசியது தெரிய வந்தது. மகேஷ் யாதவை காவல்துறையினர் விசாரித்த போது தான் கடைசியாக பேசிய போது குடவுனில் இருக்கும் ஒரு அறைக்குள் ஒளிந்திருப்பதாகவும் படிகளில் ஆட்கள் ஏறி இறங்கும் சத்தம் கேட்பதாகவும் தன்னிடம் தில்பர் நெகி கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கண்ணால் பார்த்த சாட்சிகள் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் 35க்கும் மேற்பட்ட வன்முறையாளர்களை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. இதில் 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 25 பேர் தேடப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான சாட்சிகளால் அனில் குமாரின் குடவுனுக்கு தீ வைத்தபோது அங்கு இருந்ததாக அடையாளம் காணப்பட்ட ஷாநவாஸ் தில்பர் நெகியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான்.

அனில் பேஸ்ட்ரி மற்றும் சாவ்லா புத்தகக் டிப்போவுக்கு தீ வைத்த பின்னர் அனில் குமாரின் குடவுனுக்குள் சென்றதாகக் கூறிய ஷாநவாஸ், "9-9.30 வாக்கில் காய்கறிகளும் அட்டைப் பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்த குடவுனுக்குள் சென்றோம். இரண்டாவது தளத்திற்கு சென்ற போது அங்கிருந்த அறையின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டு இருந்தது. கும்பல் கதவை உடைத்துத் திறந்த போது அங்கே அனிலின் வேலையாள் இருந்ததைப் பார்த்தது.அவனது பெயரைக் கேட்ட போது தில்பர் என்று கூறினான். நாங்கள் அவனை அடித்துப் போட்டு விட்டு அவன் நினைவு தப்பிய நிலையில் இருந்த போது அவன் மீது பேப்பர் மற்றும் அட்டைப் பெட்டிகளைப் போட்டு எரித்து விட்டோம். அதன் பின்னர் அங்கிருந்து ஓடி விட்டோம்" என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

தில்பர் நெகி கொலை செய்யப்பட்ட பிப்ரவரி 24 அன்று கைது செய்யப்பட்ட 12 பேரின் செல்ஃபோன் சிக்னல்கள் குற்றம் நடந்த இடத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 12 பேரில் சிலரின் பெயர்கள் தினேஷ் திவாரி, அலோக் திவாரி, வீர்பன் ஆகியோரின் கொலையிலும் DRP பள்ளியை சூறையாடியது மற்றும் ஷிவ் விகார் பகுதியில் இருந்த பிற இந்துக்களின் சொத்துக்களுக்கு தீ வைத்தது ஆகிய வழக்குகளின் குற்றப் பத்திரிகைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.


மேற்கண்ட பதிவு ஸ்வராஜ்யா இணைய இதழில் வெளியான ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News