Kathir News
Begin typing your search above and press return to search.

கல்வான் பள்ளத்தாக்கு உரிமை கோரலை சீனா தவிர்த்து விட்டதா அல்லது கை விட்டுவிட்டதா - சப்தம் குறைந்து வரும் சீன தூதரின் பேச்சுக்கள் குறித்து அரசியல் நிபுணர்கள் வியப்பு.!

கல்வான் பள்ளத்தாக்கு உரிமை கோரலை சீனா தவிர்த்து விட்டதா அல்லது கை விட்டுவிட்டதா - சப்தம் குறைந்து வரும் சீன தூதரின் பேச்சுக்கள் குறித்து அரசியல் நிபுணர்கள் வியப்பு.!

கல்வான் பள்ளத்தாக்கு உரிமை கோரலை சீனா தவிர்த்து விட்டதா அல்லது கை விட்டுவிட்டதா - சப்தம் குறைந்து வரும் சீன தூதரின் பேச்சுக்கள் குறித்து அரசியல் நிபுணர்கள் வியப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 July 2020 4:10 AM GMT

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் மோடியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு சீன வெளியுறவு மந்திரி வாங் யியுடன் சென்ற வெள்ளி இரவு சந்திப்பை நடத்தினார். அதில் இருந்து கடந்த 3 நாட்களாக சீன ராணுவம் உடனடியாக பின்வாங்க ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் அதன்படி தற்போது நடைபெற்று வருகிறது. பேச்சு வார்த்தையில் இந்தியா வலியுத்தலை அடுத்து, லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே வீரர்களை திரும்பப் பெறும் செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருதரப்பு மோதலுக்கு காரணமே சீனா கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவைப்போல தங்களுக்கும் உரிமை உண்டு என்பதை காட்ட முயன்று பன்னாட்டு எல்லை கோட்டை தாண்ட முயற்சித்ததுதான். ஆனால் இந்தியா சீனாவின் கல்வான் உரிமை கோரலை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. அஜித் தோவல் உடன் பேச்சுவார்த்தைக்கு முன்பாக கல்வான் விஷயத்தில் உறுதிப்படுத்தினால் மட்டுமே படைகள் பின்வாங்கும் என சீனா பிடிவாதம் பிடித்தது. ஆனால் படைகளை மறுபடியும் 2020 ஏப்ரல் நிலைக்கு கொண்டு சென்றால்தான் கல்வான் பற்றி பிறகு பேசலாம் என இந்தியா கூறியதாக தெரிகிறது. காஷ்மீர் எப்படி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அழுத்தம் திருத்தமாக இந்தியா கூறி வருகிறதோ அதே போல கல்வான் பகுதியையும் அவ்வாறே இந்தியா கூறும் நிலையில் சென்ற சனிக்கிழமை நடந்த பேச்சு வார்த்தையில் சீனா கல்வான் பற்றி எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீன தூதர் சீன தூதர் சன் வீடோங் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும். போட்டியாளர்களாக இருக்கக்கூடாது, மேலும் மோதலில் சிக்காமல் இருக்க இரு நாடுகளும் பலவிதமான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜூன் 15'ல் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதல், இரு தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இனிமேல் மோதலின் வலையில் சிக்காமல் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், 1950'களில் இருந்து இந்தியாவும் சீனாவும் கூட்டாக சுயாதீன வெளியுறவுக் கொள்கைகளை ஆதரித்து வருகின்றன என்றும் இந்தியா முன்பு வெளியிட்ட அமைதியான சகவாழ்வின் பஞ்சசீல கோட்பாடுகளை நினைவு கூர்ந்தார். மேலும் சீனாவோ அல்லது இந்தியாவோ போரை விரும்பவில்லை" என்று கூறிய அவர் சீனா ஒரு போர்க்குணமிக்க நாடு அல்ல என்றும், இரு நாடுகளுக்கும் அமைதி தேவை என்றும், மோதல்கள் தேவையில்லை என்றும் கூறி, தூதர் சீனாவின் நோக்கங்களைப் பற்றிய தவறான அனுமானங்கள் பற்றி கவலைகளை வெளிப்படுத்தினார்.

முதன்முறையாக, சீனத் தூதர் கால்வான் பள்ளத்தாக்கு குறித்து தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பதும் சனிக்கிழமை கூட்டத்திலும் அடுத்த கட்ட சமாதானங்கள் குறித்தே பேசப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில், தற்போது, கால்வான் பள்ளத்தாக்கு உரிமைகோரலை தவிர்த்திருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News