புதுச்சேரி : பொய் கூறும் சட்டமன்ற உறுப்பினர்கள் மனநல மருத்துவரை சந்திக்கலாம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தல்.!
புதுச்சேரி : பொய் கூறும் சட்டமன்ற உறுப்பினர்கள் மனநல மருத்துவரை சந்திக்கலாம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தல்.!

இதுகுறித்து அவர் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
புதுவை சட்டப்பேரவையில் ஜெயமூர்த்தி எம்எல்ஏ, புதுவை ஆளுநர் அரசு மருத்துவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறியுள்ளது 100 சதவீதம் தவறானவை. அதே போல, பஞ்சாப்பில் நான் வீட்டுக்கு வாடகை செலுத்தாததால், மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் சிலர் பேசியுள்ளனர். இதுவும் முற்றிலும் தவறானது. அந்த வீட்டு உரிமையாளருக்கு உரிய வீட்டு வாடகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது.
புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களை திசை திருப்பும் வகையில் தினமும் பொய்களை கூறி வருகின்றனர். அவர்கள் எதற்காக இப்படி கூறுகின்றனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்படி பேசுவதை நிறுத்தாவிடில், அவர்கள் பேசுவதை தடுப்பதற்குத் தேவையான பொருத்தமான நடவடிக்கையை ஆளுநர் மாளிகை எடுக்கும்.
அவர்கள் தொடர்ந்து பொய்களை கூறுவதால், புதுவையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.