Begin typing your search above and press return to search.
சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதலிடம்.!
சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதலிடம்.!

By :
அண்மையில் வெளியிடப்பட்ட சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகள் 99.23 விழுக்காடு தேர்ச்சி விகிதத்தைப் பெற்று முதல் இடத்தில் உள்ளன.
சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் 91.46 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பெற்றுள்ளன.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலிருந்து 94,498 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வினை எழுதினார்கள். இதில் 93,774 பேர் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விகிதம் 99.23 ஆக உள்ளது. மாணவர்கள் 50,591 பேரும், மாணவிகள் 43,183 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் 1,168 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். 846 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன.
Next Story