Kathir News
Begin typing your search above and press return to search.

ஹாங்காங் விவகாரம் : சீனா அமல்படுத்திய புதிய பாதுகாப்பு சட்டத்தால் ஹாங்காங்குடனான ஒப்பந்தத்தை நிறுத்திய நியூசிலாந்து .!

ஹாங்காங் விவகாரம் : சீனா அமல்படுத்திய புதிய பாதுகாப்பு சட்டத்தால் ஹாங்காங்குடனான ஒப்பந்தத்தை நிறுத்திய நியூசிலாந்து .!

ஹாங்காங் விவகாரம் : சீனா அமல்படுத்திய புதிய பாதுகாப்பு  சட்டத்தால் ஹாங்காங்குடனான ஒப்பந்தத்தை நிறுத்திய நியூசிலாந்து .!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 6:37 AM GMT

சீனா, ஹாங்காங்கில் செயல்படுத்தியிருக்கும் புதிய தேசிய பாதுகாப்புச்சட்டம் நியூசிலாந்து நாட்டின் "கொள்கைகளுக்கு" பொருந்தாது என்பதால் ஹாங்காங்குடனான ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளதாக (Extradition Treaty) நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டென் செவ்வாய் (28 ஜூலை) அன்று அறிவித்துள்ளார் .

வெல்லிங்டன்னில் உள்ள ஊடகங்களுடன் அர்டென் உரையாடும்போது "அடிப்படை கூட்டு சுதந்திரம் மற்றும் அரசியலில் தனக்கு பிடித்த நிலைப்பாட்டை எடுப்பது தான்" சீனாவுடன் ஒத்து வராத அந்த கொள்கைகள் என்று கூறியதாக நியூசிலாந்து ஹெரால்ட் செய்தித்தாள் அறிவித்துள்ளது .

சீனாவிடமிருந்து விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, இருநாட்டுக்கும் இடையே "முதிர்ச்சியடைந்த,பக்குவமான" உறவு உள்ளதாக அர்டென் தெரிவித்தார் .

இவ்வாறு வெவ்வேறு நிலைப்பாட்டை எடுப்பது பலசந்தர்ப்பங்களில் (சீனாவுடன்) ஏற்பட்டுள்ளன, இதுவும் அதில் ஒன்று என்று கூறியுள்ளார் .

முன்னதாக, ஹாங்காங்கின் குற்றவியல் நீதி அமைப்பு சீனாவிடமிருந்து தனித்திருக்கும் என்று இனிமேலும் நியூசிலாந்து நம்பமுடியாதென்று வெளியுறவு துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர் கூறியுள்ளார் .

சீனா புதிதாக விதித்த பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளில் "ஒரு நாடு, இருவேறு அமைப்பு " என்ற திட்டம் மிகவும் குறைமதிப்புக்கு உள்ளாவதுடன், ஹாங்காங் குறித்து சர்வதேச சமூகத்திற்கு சீனா அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதாகவும் உள்ளது.எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு நியூசிலாந்து பதிலளிப்பது முக்கியமாகும் .

"அதில் ஒரு பகுதியாக ,நியூசிலாந்து ஹாங்காங் உடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது" என்றும் நியூசிலாந்தின் ஹெரால்ட் செய்தித்தாளுக்கு அவர் கூறியுள்ளார் .

கடந்த ஜூலை 2ல் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்ட அச்சட்டமானது பிரிவினை,பயங்கவாதம், துரோகம் ஆகியவற்றை கடுங்குற்றங்களாக கருதி ஆயுள் தண்டனை வரை தண்டனை கிடைப்பதை இலக்காக கொண்டுள்ளது. இந்த சட்டத்தின் காரணமாக ஆஸ்திரேலிய, கனடா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சீனாவுக்கு எதிராக தங்கள் பக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அர்டென் அறிவிப்புக்கு பதிலளித்துள்ள சீனா, "நியூசிலாந்து சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுகிறது" என்றும் அதன் தூதர் Wu Xi, "நியூசிலாந்து அரசாங்கத்தின் முடிவானது சர்வதேச சட்டம் மற்றும் உறவுகளை மீறும்வகையில் உள்ளது" என்று கூறியுள்ளார் .



source: https://swarajyamag.com/insta/new-zealand-suspends-extradition-treaty-with-hong-kong-slams-china-imposed-new-national-security-law

Next Story
கதிர் தொகுப்பு
Trending News