நீர் ஆதார இயக்கம்: தினமும் ஒரு லட்சம் குழாய் இணைப்புகள் வழங்கப்படுகின்றன - மத்திய அரசு .!
நீர் ஆதார இயக்கம்: தினமும் ஒரு லட்சம் குழாய் இணைப்புகள் வழங்கப்படுகின்றன - மத்திய அரசு .!

நீர் ஆதார இயக்கம் 2019 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது, 2019-20 ஆம் ஆண்டின் 7 மாதங்களில் சுமார் 84.83 லட்சம் கிராமப்புற குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
. மேலும் கோவிட்-19 வைரஸ் தொற்றுகளுக்கு மத்தியில், முதல் ஊரடங்கு முடிவுற்றதும், 2020-21ல் இதுவரை சுமார் 45 லட்சம் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே தினமும் சுமார் 1 லட்சம் குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கி அதன் வேகத்தை வெளிப்படுத்துகிறது..
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சொத்தும் புவி-குறியிடப்பட்டு, இணைப்புகள் குடும்ப தலைவரின் 'ஆதார்' எண்ணுடன் இணைக்கப்படுகின்றன
நீர் ஆதார இயக்கத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், மாவட்ட அளவில் விளக்கப் பலகை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சகத்தின் வலைதளத்தில் காணலாம்.
இந்த இயக்கம் நடைமுறைக்கு வந்தபின், அடிப்படை தரவுகளின் மறு மதிப்பீடு பயிற்சியை புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன; அதன்படி நாட்டில் 19.04 கோடி கிராமப்புற குடியிருப்புகள் உள்ளன, அவற்றில் 3.23 கோடி குடியிருப்புகளுக்கு ஏற்கனவே குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 15.81 கோடி குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. எனவே, இதன் நோக்கம் என்னவெனில், சுமார் 16 கோடி குடியிருப்புகளுக்கு காலவரைக்கு உட்பட்ட தினத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட இணைப்புகள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் 3.2 கோடி குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதே இதன் பொருள். அதாவது தினசரி அடிப்படையில், தோராயமாக. 88,000 குழாய் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இந்த இலக்கை மனதில் கொண்டு, ஒவ்வொரு கிராமப்புற குடியிருப்புக்கும் குழாய் இணைப்பை வழங்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கடுமையாகப் பணியாற்றி வருகின்றன. இந்த முயற்சியில், பிகார், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சிறந்த செயல்திறனுடன் முன்னிலை வகிக்கின்றன .
நீர் ஆதார இயக்கத்தை செயல்படுத்துவதற்கு 2020-21ல் ரூ. 23,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, நீர் ஆதார இயக்கத்தை செயல்படுத்துவதற்கு ரூ. 8,000 கோடிக்கும் அதிகமான மத்திய நிதியானது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் உள்ளது.
இது தவிர, 2020-21ல் 15 வது நிதி ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 சதவிகித நிதியை மானியமாக வழங்கியுள்ளது; அதாவது, குடி நீர் வழங்கல் மற்றும் துப்புரவுப் பணிகளுக்கு ரூ. 30,375 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையில் 2020 ஜூலை 15-ல் மாநிலங்களுக்கு 50 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. இது கிராமங்களில் குடிநீர் விநியோக முறைகளின் சிறந்த திட்டமிடுதல், செயலாக்கம், மேலாண்மை, இயக்கம் மற்றும் பராமரிப்பிற்கு உதவும், இதனால், மக்கள் வழக்கமான நீண்டகால அடிப்படையில் குடிநீரை தொடர்ந்து பெற முடியும்.
ஐ.நா. முகமைகள், அரசு சார்பற்ற அமைப்புகள் / சமூக அடிப்படையிலான அமைப்புகள், சமுகப் பொறுப்புணர்வு கொண்ட பெரு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அறநிறுவனங்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச முகமைகளிடம் கூட்டாண்மை ஏற்படுத்துவது குறித்து, இந்த இயக்கம் ஆய்வு செய்து வருகிறது. நீர் ஆதாரம், மக்களின் அடுத்த இயக்கமாக மாறும் என்று மத்திய அரசு நம்புகிறது. மேலும் அனைவரின் வணிகமாகவும் உருவாகும், இந்தத் துறையின் உருமாற்றத்தின் வேறுபாடு இதுவரை ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பொறுப்பாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது.
நீரை அனைவரின் வணிகமாக மாற்ற, இந்த இயக்கம் கூட்டாண்மையை ஏற்படுத்துவதுடன், பல்வேறு நிறுவங்கள்/தனி நபர்கள் ஆகியவர்களுடன் இணைந்து அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்ற இலக்கை அடையப் பாடுபடுகிறது.