Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் மூன்றாயிரம் இந்திய மாணவர்களுக்கு தனி விமானம் - அசத்தும் பிரபல நடிகர்!

வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் மூன்றாயிரம் இந்திய மாணவர்களுக்கு தனி விமானம் - அசத்தும் பிரபல நடிகர்!

வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் மூன்றாயிரம் இந்திய மாணவர்களுக்கு தனி விமானம் - அசத்தும் பிரபல நடிகர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2020 1:03 PM GMT

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர் இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் பல உதவிகள் செய்து வருகிறார் மேலும் இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். இது குறித்து அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல இவர் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து, கிர்கிஸ்தான் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3000 மருத்துவ மாணவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்தபோது, ஜுலை 22-ஆம் தேதி அந்த மாணவர்கள் தனி விமானம் மூலம் நாட்டுக்கு திரும்ப நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார்.

மேலும், இவர் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மெயில் ஐ.டி-யை தெரிவித்துள்ள அவர், எதாவது தொடர்புக்கு இதில் மெயில் அனுப்பும்படி பதிவிட்டுள்ளார்.

எந்த நடிகரும் செய்யாத அளவிற்கு தன் சொந்த பணத்தை வைத்து உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் செய்யும் உதவிகள் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News