Kathir News
Begin typing your search above and press return to search.

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தில் பேச்சாரா படம் அதிரவைக்கும் புதிய சாதனை.!

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தில் பேச்சாரா படம் அதிரவைக்கும் புதிய சாதனை.!

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தில் பேச்சாரா படம் அதிரவைக்கும் புதிய சாதனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 5:02 AM GMT

இந்த படம் ஆங்கிலத்தில் வெளியான *The Fault in Our Stars* திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது முடிவை முன்னதாகவே அறிந்து இந்த படத்தில் நடித்தாரோ என்ற சந்தேகமே படத்தை பார்க்கும் ஒவ்வொரு நொடிக் காட்சியிலும், பார்ப்போர்ரின் மனதை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இருவர் காதலிப்பதும், அதில் நாயகன் இறுதியில் முன்னதாக மறைவதும் தான் கதை.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், சோகத்தில் பிழியும் பின்னணி இசையும் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் சுஷாந்த் பெயர் இம்மானுவேல் ராஜ்குமார் ஜூனியர். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவரது நடிப்பு திறமையை காட்டியிருக்கிறார். மேலும் கேன்சர் நோயால் தனது கால் போய்விட்டதை கேன்சர் நோயாளிகள் மத்தியில் காட்டும் காட்சி கண்களில் நீரை வரவழைக்கிறது. இதனிடையே கடைசியில், தனது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை தானே காண வேண்டும் என தனது நண்பன் மற்றும் காதலியை பேச வைக்கும் காட்சி நெஞ்சை பிழிந்து எடுக்கிறது.

இந்த படத்தில் கிஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சஞ்சனா சங்கி, அறிமுக ஹீரோயின் என்றே சொல்ல முடியாத அளவுக்கு நடித்து தள்ளி இருக்கிறார். கேன்சர் நோயாளியாக இருக்கும் போதும் சின்ன சின்ன ஆசைகளை செய்ய முடியாத நிலையில் இருக்கும். ஆனால் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வருகைக்கு பின்னர் டோட்டலாக மாறுவதும், இடைவேளை காட்சியில், மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்புவதுமாக வேற லெவல் ஆக்டிங்கில் மிரட்டி உள்ளார்.

மேலும் அபிமன்யூ வீர் எனும் இசையமைப்பாளரை காண அடம்பிடித்து நாயகி கிஸ்ஸி தனது காதலன் மேனி மற்றும் அம்மாவுடன் மருத்துவர் ஆலோசனைகளை எல்லாம் மீறி 'பாரீஸ்' செல்கிறார். இவர் தில் பேச்சாரா படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகராகவே படம் முழுவதும் நடித்து இருக்கிறார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ரஜினிகாந்த்தை போல ஸ்டைலாக சிகரெட்டை வாயில் வைத்து இருப்பது, ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் ஒரு ஷார்ட் பிலிம் எடுப்பது போல படம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் நிறைந்து இருக்கிறார். அதே போல 'சரி' எனும் தமிழ் வசனம் படத்தில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது. அழகான படத்தை கொடுத்துவிட்டு, படத்தின் கிளைமேக்ஸில் வருவதை போலவே சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் மறைந்து விட்டார்.

இந்த படம் முழுக்க முழுக்க உணர்வுகளை தூண்டும் படமாகவும் இருக்கிறது.இந்த படத்தை பார்த்து சிரித்து அழலாம் சுஷாந்த் சிங்கிற்காக மட்டுமே என்று ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News