Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் சாதியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான் - டாக்டர் கிருஷ்ணசாமி மகனின் அதிரடி பதில்களால் தலைதெறிக்க ஓட்டமெடுத்த தி.மு.க. ஐ.டி. விங்.!

தமிழகத்தில் சாதியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான் - டாக்டர் கிருஷ்ணசாமி மகனின் அதிரடி பதில்களால் தலைதெறிக்க ஓட்டமெடுத்த தி.மு.க. ஐ.டி. விங்.!

தமிழகத்தில் சாதியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான் - டாக்டர் கிருஷ்ணசாமி  மகனின் அதிரடி பதில்களால்  தலைதெறிக்க ஓட்டமெடுத்த தி.மு.க. ஐ.டி. விங்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2020 6:15 AM GMT

பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதை திருமணம், தமிழ்நாடு பெயர், 69% இட ஒதுக்கீடு, செம்மொழி அங்கீகாரம், அதிக மருத்துவக் கல்லூரிகள், முதல் தலைமுறை பட்டதாரிகள், மனிதவள குறியீட்டில் சிறப்பிடம் இப்படி திராவிடம் நிறைய செய்திருக்கிறது என்றும் இவற்றை எதிர்க்கும் கும்பல், திராவிடம் என்பதே போலி என்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கருத்து வெளியிட்டார்.



இதற்கு பதிலடி தரும் விதத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி பதிலளித்துள்ளார். அதில் பெண்களுக்கான சம உரிமை, சொத்துரிமை, முதல் தலைமுறை கல்வி பயின்று பட்டதாரிகள் ஆனது எல்லாம் கடந்த நூறு ஆண்டுகளில் உலகம் எங்கும் நடைபெற்ற சீர்திருத்தங்கள் தான். பல இந்திய மாநிலங்களிலும் இது நடந்துள்ளது, இதற்கு எல்லாம் திராவிட ஸ்டிக்கர் ஒட்டி கொள்வதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் "குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே கல்வி, சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டுமே மருத்துவக்கல்வி என்றிருந்த நிலையை திராவிட சித்தாந்தம் மாற்றவில்லை எனில் இப்படி பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டத்தினை ஒட்டிக் கொள்ள முடியுமா? என்பதை சில்லறை சீர்திருத்தவாதிகள் சிந்திக்க வேண்டும்" என திமுக ஐடி விங் மீண்டும் தூண்டியது .



இதற்கு ஷ்யாம் கிருஷ்ணசுவாமி, உங்கள் கதை எல்லாம் முரசொலி படிக்கிற சில்லறைகள் நம்பலாம், இங்கே வேகாது என்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் 1835ஆம் ஆண்டு இந்தியாவில் மருத்துவ கல்வியை ஐரோப்பிய முறைப்படி ஆங்கில மொழியில் மட்டும் அனைத்து சாதியினருக்கும் சென்றடைய சட்டம் இயற்றி அமலுக்கு கொண்டு வந்தார் என பதிலடி கொடுத்துள்ளார்.



உத்திரப் பிரதேசம் கடந்த 100 ஆண்டுகளாக இதே நாட்டில் இருந்தும் ஏன் சீர்திருத்தம் அடையவில்லை, உத்தரப்பிரதேசம் ஏன் இன்னும் பின் தங்கியுள்ளது என்று என கேள்வி கேட்டு கிருஷ்ணசாமியை மீண்டும் சீண்டியது திமுக ஐடி விங்.

இதனை தொடர்ந்து திமுக ஐடி விங் கேட்ட இந்த கேள்விக்குசரியான பதிலடி கொடுக்கும் விதத்தில் "60 வருடங்களாக ஆட்சி செய்த திமுகவின் தோழமை கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த சமாஜ்வாடியை எதுவும் சொல்ல மாட்டார்கள், ஆனால் எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சியை மட்டுமே கேள்வி கேட்பார்கள், அது சரி.. உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மாயாவதி அம்மையார் முதலமைச்சராக முடிகிறது, சாதி மறுக்கும் இந்த மாநிலத்தில் இது நடந்துள்ளதா, ஆனால் இங்கு சாதி பாசத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஓடி அங்கு மட்டும் நிற்பார் ஒருவர் என கனிமொழியை மறைமுகமாக சுட்டிக் காட்டி ஷ்யாம் தெரிவித்துள்ள பதிலுக்கு இன்னும் திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.



மேலும் ஒரு பக்கம் சாதி மறுப்பு எனக் கூறிக்கொண்டே இங்கு சாதியை இறுக்கமாக வைத்திருப்பதில் திராவிடத்திற்கு மிகப்பெரிய பெரிய பங்கு உண்டு என்றும் இதற்கு ஏராளமான சான்றுகள் தன்னிடம் உள்ளதாக ஷ்யாம் கிருஷ்ணசாமி கூறியதும் அவர் கொடுத்த கொடுத்த மரண அடியில் பதில் தர முடியாமல் தெறித்து ஓடியது திமுக சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் தலைமையிலான திமுக ஐடி விங் என கூறப்படுகிறது.

https://www.updatenews360.com/tamilnadu/krishnasamy-son-shyam-attack-dmk-120720/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News