கிரிக்கெட் வீரரிடம் தான் பட்ட அவமானம் பற்றி பகிர்ந்து கொள்ளும் மாதவன்.!
கிரிக்கெட் வீரரிடம் தான் பட்ட அவமானம் பற்றி பகிர்ந்து கொள்ளும் மாதவன்.!

நடிகர் மாதவன் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாக அறியப்படுபவர். இவர் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களின் எப்பொழுதுமே டச்சில் இருப்பார். தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் மாதவன் சிறு வயதில் கிரிக்கெட் வீரர் இடம் நடந்த மோசமான அனுபவம் ஒன்றை குறிப்பிட்டிருக்கிறார்.மாதவன் 'நான் 8 வயதாக இருக்கும் போது அப்போது பிரபலமாக இருந்த கிரிக்கெட் வீரரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது என் நண்பர்களுடன் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க சென்றேன். அவரோ யாரிடமோ பேசிக்கொண்டே 50 கையெழுத்துகளைப் போட்டுத்தந்தார். அது எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
மேலும் அவர் அந்த சம்பவம்தான் எனது வாழ்க்கையில் எனக்கு பணிவைக் கற்றுத்தந்தது. யாரிடமாவது என்னிடமிருந்து ஆட்டோகிராப் கேட்டால் நான் அவள் கண்களை பார்த்துக்கொண்டே தான் அவர்களுக்கு கையெழுத்திட்டு தருவேன் என்றார். ரசிகர்கள் நம் மீது இருக்கும் அன்போடு தான் நம்மிடம் வந்து ஆட்டோகிராஃப் கேட்கிறார்கள் அதை நாம் பணிவோடும் அவர்கள் மகிழ்ச்சி தரும் வகையிலும் ஆட்டோகிராஃப் போட்டு தர வேண்டும். மேலும் அவர்கள் முகம் சுளிக்கும்
அளவிற்கு நாம் நடந்துக்கொள்ள கூடாது.நாம் அவர்களும் சக மனிதராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த கிரிக்கெட் வீரர் அப்படி நடந்து கொள்ளவில்லை அது எனக்கு பாடத்தைக் கற்றுத் தந்தது என்றார்.ஆனால் அந்த கிரிக்கெட் வீரர் யார் என்பதை அவர் சொல்லவில்லை.