மூன்று மாதத்துக்கு பிறகு மீண்டும் பரவும் கொரோனா - அச்சத்தில் சீனா மக்கள்.!
மூன்று மாதத்துக்கு பிறகு மீண்டும் பரவும் கொரோனா - அச்சத்தில் சீனா மக்கள்.!

சீனாவில் மூன்று மாதத்திற்கு பின்பு நேற்று முன்தினம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் கரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போது மூன்று மாதத்துக்குப் பிறகு சீனாவில் நேற்று முன்தினம் 101 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் 98 பேர் உள்நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் மூன்று பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நேற்று முன்தினம் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் நிலவரப்படி டாலியன் நகரில் இருந்தவர்கள் வாயிலாக பீஜிங் உள்பட 9 நகரங்களில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் சீனாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் உள்பட 482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 25 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் இதனை இரண்டாவது அலை என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.