"காட்டுப் பயலே" என்ற பாடலை சூர்யாவிற்கு பரிசாக அளித்த சூரரைப்போற்று படக்குழுவினர்!!!
"காட்டுப் பயலே" என்ற பாடலை சூர்யாவிற்கு பரிசாக அளித்த சூரரைப்போற்று படக்குழுவினர்!!!

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டுவிட்டரில் சூர்யாவுக்காக #HappyBirthdаySuriya, #HBDSuriya உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பகிர்ந்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடித்து வெளியாக இருக்கும் படம் சூரரைப்போற்று இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது. மேலும் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து மேலும் காட்டுப் பயலை என்ற ஒரு நிமிட பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஷிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார்.முக்கிய கதாபாத்திரத்தில் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. காட்டு பயலே என்ற பாடலை "சினேகன்" எழுதியுள்ளார், 'தீ' பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.