Kathir News
Begin typing your search above and press return to search.

"இந்துத்துவா கட்சியின் வீழ்ச்சி".! உத்தவ் தாக்கரேவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்!

"இந்துத்துவா கட்சியின் வீழ்ச்சி".! உத்தவ் தாக்கரேவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்!

இந்துத்துவா கட்சியின் வீழ்ச்சி.! உத்தவ் தாக்கரேவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் கண்டனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 July 2020 8:52 AM GMT

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பரிந்துரைத்ததை அடுத்து கடந்த திங்களன்று விஸ்வ இந்து பரிஷத்(VHP) அமைப்பு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது .

மேலும் VHP வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீ உத்தவ் தாக்கரேவின் அறிக்கையானது அவரது குருட்டு எதிர்ப்பை மட்டுமே காட்டுகிறது மற்றும் ஒரு காலத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பால் சஹாப் தாக்கரே தலைமையிலான இந்துத்துவா கட்சியின் வீழ்ச்சிக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



"பூமிபூஜை ஒரு புனிதமான சடங்காகும், இது எந்தவொரு கட்டுமான பணிகளை தொடங்குவரதுக்கு முன் அன்னை பூமியின் ஆசீர்வாதங்களையும் பெற வேண்டும்" என்று VHPயின் சர்வதேச செயற்குழுத் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார். மேலும் இத்தகைய சடங்குகளை வீடியோ கான்பெரென்ஸ் மூலம் செய்ய முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் . அரசாங்கம் வழங்கிய COVID-19 வழிகாட்டுதல்களின்படி நாடு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் குமார் கூறியுள்ளார் .

மேலும் அந்த அறிக்கையில் , பூமி பூஜை நிகழ்வானது சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு இணங்க செய்யப்படும் என்றும், உத்தவ் தாக்கரே எழுப்பியது "மோசமான பாசாங்கு" என்றும் கூறப்பட்டுள்ளது . அந்நிகழ்வில் 200 நபர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் அமைக்கப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

முன்னதாக உத்தவ் தாக்கரே, சிவசேனா ஊதுகுழலான சமனாவுக்கு அளித்த பேட்டியில் "ஒரு பூமி பூஜை விழாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்யலாம். இது மகிழ்ச்சியான நிகழ்வு மற்றும் வீடியோ கான்பெரென்ஸ் வழியாக ஒளிபரப்பினால் லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை அனுமதிக்க கூடாது " என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் , "இது சாதாரண கோயில் அல்ல. கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் நாம் தவித்திடும் நேரத்தில் இவ்விழா திட்டமிடப்பட்டுள்ளது ஆனால் மதக் கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கு நான் அயோத்தி செல்ல முடியும், ஆனால் ராமர் பக்தர்களின் லட்சக்கணக்கானோர் வருவார்கள் அவர்களை தடுப்பீர்களா? எனவே பூமி பூஜையை வீடியோ கான்பெரென்ஸ் மூலம் செய்யலாம்"என்று கூறியுள்ளார் .



source: https://www.opindia.com/2020/07/uddhav-thackeray-shiv-sena-saamana-ayodhya-ram-temple-bhoomi-pujan-covid-19-bala-saheb-vhp/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News