மாணவர்களுக்கு ஊக்கமளித்த மாதவன் - மார்க் எல்லாம் வெறும் நம்பர் மட்டும் தான்.!
மாணவர்களுக்கு ஊக்கமளித்த மாதவன் - மார்க் எல்லாம் வெறும் நம்பர் மட்டும் தான்.!

By : Kathir Webdesk
மாணவர்களின் தேர்ச்சி அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் மாதவன் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஒரு போஸ்ட்டை போட்டுள்ளார்.இளைஞர்களுக்கு எப்போதுமே இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் இவர், போர்டு எக்ஸாம் ரிசல்ட்டுகளால் மாணவர்கள் மனம் உடைந்து போக வேண்டாம் என்பதற்காக "தன்னுடைய மதிப்பெண் சதவீதத்தை" அறிவித்து இருக்கிறார்.
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் மாதவன் நான் 58% மார்க் தான் எடுத்தேன்.மார்க் என்பது ஒரு பிரச்சினையே கிடையாது என்பது மார்க் ஒரு நம்பர் மட்டும் தான் என்று மாணவர்களுக்கு ஆறுதலாக கூறினார்.
மேலும் இவர் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் வருத்தப்பட வேண்டாம் என்றும் அறிவித்திருந்தார்.
வாழ்க்கை இங்கேயே முடிவதில்லை இனிமேல் தான் வாழ்க்கை இருக்கிறது என்று கருத்துக்களை அழகாக எடுத்துக் கூறினார். இன்னும் வாழ்க்கையில் நிறைய விளையாட்டுக்கள் இருக்கும் என்றும் தனது ஸ்டைலில் க்யூட்டாக கூறினார். மாதவனின் பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், அவரது நல்ல முயற்சியை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.மாணவர்கள் தங்கள் தனித் திறமையை கண்டறிந்து அதனை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.
