காஷ்மீர் பா.ஜ.க. தலைவரைக் கொன்றது யார்? பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதியா - அதிரவைக்கும் தகவல்கள்.!
காஷ்மீர் பா.ஜ.க. தலைவரைக் கொன்றது யார்? பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதியா - அதிரவைக்கும் தகவல்கள்.!

கடந்த புதன் இரவு காஷ்மீரில் பந்திப்போரா மாவட்ட பாஜக தலைவர் வசீம் பாரி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார். அவருடன் இருந்த அவரது தந்தை பஷீரும் சகோதரர் உமர் சுல்தானும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க 8 காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தும் இத்தகைய சம்பவம் நடந்தேறியது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் 8 காவலர்களுமே அவர்களுக்கு அருகில் இல்லை என்றும் வசீமின் கடைக்கு முன் அவர் தன் தந்தை மற்றும் சகோதரருடன் நின்று கொண்டு இருந்த போது தீவிரவாதிகள் சுட்ட நிலையில் காவலர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்ததாக கூறப்படுகிறது. கடமையை சரிவர செய்யாததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதி ஒருவன் பாகிஸ்தானுக்குச் சென்று தீவிரவாத பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பந்திப்போரா காவல் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவான அவறதூ உருவத்தை வைத்து அபித் ஹக்கானி என்பவன் தான் அந்த தீவிரவாதி என்று கண்டறிந்துள்ளனர். வாகா பார்டர் வழியாக பாகிஸ்தான் சென்ற அவன், அங்கு தீவிரவாத பயிற்சி எடுத்துக் கொண்டு காஷ்மீர் எல்லை வழியாக ஊருவியதாகக் கூறப்படுகிறது.