சசிகலா கொலை விவகாரம்! இன்னும் சிக்காத திமுக இளைஞரணி தேவேந்திரன்!அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
சசிகலா கொலை விவகாரம்! இன்னும் சிக்காத திமுக இளைஞரணி தேவேந்திரன்!அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

திமுக இளைஞரணி செயலாளரும் அவரது சகோதரரும் சசிகலா என்ற இளம்பெண்ணை சீரழித்து கொலை ணெய்த வழக்கில் மேலும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வரதுவங்கியுள்ளன.
சசிகலா குளித்து கொண்டிருக்கும் போது அதை திமுக பிரமுகர் 0திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார். 0இதற்கு அவரது சகோதரரும் உடந்தையாக இருந்துள்ளார் கடந்த 4 வருஷமாக சசிகலாவை மிரட்டி மிரட்டியே இந்த சகோதர்கள் சீரழித்த நிலையில், கடைசியில் சசிகலா தூக்கு போட்டு தற்கொலையே செய்து கொண்டார்.. இந்நிலையில், "சசிகலா மீது எனக்கு ஆசை இருந்தது.. சாகறதுக்கு முன்னாடிகூட, சசிகலாவை கன்னத்தில் அறைந்தேன்" என்று 2 குற்றவாளிகளில் ஒருவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்தி வருகிறது.. செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்பவர் கடந்த 24-ந்தேதி அவரது சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. செய்யூர் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால், தங்கையின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் அருண்பாபு செய்யூர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.
அத்துடன், தனது பெரியப்பா மகன்களான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர்தான் இந்த சாவுக்கு காரணம், சசிகலா சடலத்தை தோண்டி இன்னொரு முறை போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுடுகாட்டிலேயே உட்கார்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார். அப்போதுதான் இந்த விவகாரம் வெடித்து கிளம்ப தொடங்கியது.
புகாருக்கு உள்ளானவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரனும், அவரது சகோதரர் புருஷோத்தமன் என்பவரும்.. இவர்கள் சசிகலாவை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.. சசிகலா குளிக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வந்துள்ளனர்.. 4 வருடமாக இந்த நகர வேதனையில் சசிகலா தவித்து வந்துள்ளார். வீட்டில் தனக்கு நடக்க இருக்கும் கல்யாணத்தையும் அண்ணன்-தம்பி தடுத்து வந்துள்ளனர்.. இதனால் மனமுடைந்த சசிகலா தூக்கு போட்டு தொங்கியே விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், சசிகலாவின் மரணம் தொடர்பாக புருஷோத்தமன் போலீசில் சரணடைந்துள்ளார். ஆனால், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அவரது சகோதரரும், திமுக இளைஞரணி செயலாளருமான தேவேந்திரனை காணோம்.. "சசிகலா மீது எனக்கு ஆசை இருந்தது.. சாகறதுக்கு முன்னாடிகூட, சசிகலாவை கன்னத்தில் அறைந்தேன்" என்று 2 குற்றவாளிகளில் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.