Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து அஜித் படத்தின் ரீமேக் உரிமங்களை வாங்கி குவிக்கும் போனி கபூர்!

தொடர்ந்து அஜித் படத்தின் ரீமேக் உரிமங்களை வாங்கி குவிக்கும் போனி கபூர்!

தொடர்ந்து அஜித் படத்தின் ரீமேக் உரிமங்களை வாங்கி குவிக்கும் போனி கபூர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2020 1:13 PM GMT

தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இருவரின் கூட்டணியிலும் நேர்கொண்ட பார்வை என்ற படம் உருவாகியது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களுக்கும் இயக்குனர் வினோத். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தல அஜித்தின் பழைய சூப்பர் ஹிட் படங்களை பார்த்த போனிகபூர் அதன் ரீமேக் உரிமத்தை வாங்கி இருக்கிறார்.அந்த வகையில்தான் சமீபத்தில் அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான வாலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார்.

தற்போது அஜீத் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படத்தையும் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரீமேக் உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளாராம். அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் "வரலாறு".

இப்படத்தில் போனிகபூர் மகன் ஹிந்தியில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருடைய ஆரம்பம் ஹிட்டாக வேண்டும் என்றும் அஜித் படங்களை வாங்கிக் கொண்டிருக்கிறாராம்.

இந்த செய்தியை வலைப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News