Kathir News
Begin typing your search above and press return to search.

மைக்கேல் ஹஸ்ஸியின் அசத்தலான ஐ.பி.எல் லெவன் அணி - கேப்டனாக டோனி.!

மைக்கேல் ஹஸ்ஸியின் அசத்தலான ஐ.பி.எல் லெவன் அணி - கேப்டனாக டோனி.!

மைக்கேல் ஹஸ்ஸியின் அசத்தலான ஐ.பி.எல் லெவன் அணி - கேப்டனாக டோனி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 July 2020 11:44 AM GMT

மைக்கேல் ஹஸ்ஸியின் ஐ.பி.எல் லெவன் அணிக்கு எம்.எஸ் டோனியை தேர்வு செய்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இந்த ஆண்டின் 13 வது சீசன் கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி ஐபில் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த லெவன் அணியில் எட்டு இந்தியா வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். போட்டியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் தேர்வு செய்துள்ளார். அதன் பின் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார்.


விக்கெட் கீப்பராகவும் மற்றும் கேப்டனாகவும் எம்எஸ் டோனியை தேர்வு செய்துள்ளார்.

இதற்கு பிறகு ஆல்–ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஆன்ட்ரி ரசல் தேர்வாகியுள்ளார். சுழல் பந்துவீச்சாளர்களாக ரஷித் கான் மற்றும் யுவேந்திர சகால் தேர்வாகியுள்ளார். வேக பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்துள்ளனர். 12வது வீரராக கே எல் ராகுல் இடம் பிடித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News