"சீனாவை அகற்று, இந்தியா பிற நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க இதுதான் பொன்னான நேரம்!" - அமெரிக்கா கருத்து!
"சீனாவை அகற்று, இந்தியா பிற நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க இதுதான் பொன்னான நேரம்!" - அமெரிக்கா கருத்து!

இந்தியா - அமெரிக்க இடையேயான நல்லுறவு சீன சர்வாதிகார ஆட்சிக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. இப்போது அமெரிக்க நிர்வாகமும் குறிப்பாக அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போவும், இந்தியாவுடன் இணைந்து சீனாவுக்கு இருக்கும் உலக வர்த்தகத்தை முடக்குவது பற்றி தனது கருத்தை ஜி-5 உச்சிமாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த இந்தியா ஜி-5 உச்சி மாநாட்டில் புதன்கிழமை, மைக், தனது உரையின் போது, சீனாவின் உலகளாவிய வர்த்தகத்தை மற்றும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மற்றும் பலவற்றை இந்தியா தனது நம்பகத்தன்மை மூலம் அதனை தன் வசம் இருக்க வேண்டும், ஏனென்றால் இத்தருணம் இந்தியாவுக்கு மிக முக்கிய தருணமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வர்த்தகத்தை சீனா தன் கையில் வைத்துள்ளது. தற்பொழுது அதற்கு நேர்மாறாக கொரான வைரஸை பரப்பிவிட்டு அதன் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது. ஏற்கனவே சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளையும் இந்தியாவுக்கு கொண்டு வர பல நிறுவனங்கள் முன் வருகின்றன. குறிப்பாக, தோல் ஆராய்ச்சி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் போன்ற பல நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியா ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு நாடாக திகழ்கிறது. மேலும், அமெரிக்காவை போல் ஒரு சிறந்த ஜனநாயக நாடு, எங்களது நட்பு நாடு கூட. ஆகவே, இந்த பொன்னான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூர தாக்குதலில் 20 இந்தியர்கள் மரணத்தை கேட்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இத்தகு நடவடிக்கையில் ஈடுபட்ட சீன அரசுக்கு நாங்கள் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறோம்.
முன்னெப்போதையும் விட இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக வலுவாக செல்கின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் சக்திவாய்ந்த "ஜி 7" உச்சி மாநாட்டின் மூலம் உலக மக்கள் நன்கு அறிவர். ஆகவே இந்த வாய்ப்பை பணி பயன்படுத்தி இந்தியா மேலும் சக்தி வாய்ந்த நாடாகத் திகழ தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளார் அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ.