புதுச்சேரி : ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர், அதிமுக, பாஜக ஆகிய எதிகட்சியினர் வெளி நடப்பு.!
புதுச்சேரி : ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர், அதிமுக, பாஜக ஆகிய எதிகட்சியினர் வெளி நடப்பு.!

பட்ஜெட்டிற்கு முழு வடிவம் பெறாமல் சட்டப்பேரவை ஏன் கூட்ட வேண்டும் என்று கேள்வி எழுகிறது, யுனியன் பிரதேச சட்டபடி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சரியான கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு வேறு ஒரு தேதியில் சட்டப்பேரவை கூட்டினால் ஆளுநர் உரை அளிப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் துணைநிலை ஆளுநரின் கடிதத்தை மீறி முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அப்போது பேரவையில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும் ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் எப்படி தாக்கல் செய்ய முடியும் என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளி நடப்பு செய்து பட்ஜெட் உரையை ஒட்டுமொத்த எதிர் கட்சிகள் புறக்கணித்தனர்.
வெளி நடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, வழக்கமாக முதல் கூட்டத்தொடரில் கவர்னர் சட்டமன்றத்திற்கு வந்திருந்து உரை நிகழ்த்துவது மரபு, ஆனால் இன்று கவர்னர் உரை நிகழ்த்தவில்லை. நிதி நிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன், கவர்னர் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
அப்போதுதான் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கவர்னர் அங்கீகாரம் இல்லாமல் நிதி நிலை அறிக்கையை வாசிப்பது குழப்பமான சூழலை உருவாக்கும். முதல்வர் கவர்னரை குறை கூறியே காலத்தை தள்ளி வருகிறார். எல்லா திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என தினமும் பாட்டு பாடுகிறார்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது ஆட்சியாளர்களின் கடமை. காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. வீட்டிற்கு ஒருவருக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என கூறினார்கள். இது சாத்தியமா என்று கூட யோசிக்காமல் வாக்குறுததி கொடுத்தனர். இன்று வரை ஒருவருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.
ஆனால் பலரை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர். கூட்டுறவு பெட்ரோல் பங்குகள், சர்க்கரை ஆலை ஆகியவற்றை தனியாருக்கு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையை கூட புதிதாக தொடங்கவில்லை. நெசவாளர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. விவசாயிகள் மோசமான நிலையில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக புதுவையின் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.
வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தாமல் அதிகார சண்டை நடத்துகின்றனர். படிக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எதையும் செய்யவில்லை. கொரொனா நோயை தடுக்க அரசு கவனம் செலுத்தவில்லை. மருத்துவ கல்லுரி தேவையா என கேட்டார்கள். தற்போது அந்த மருத்துவ கல்லூரிதான் கொரொனா நோய்க்கு உதவுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் தரப்படவில்லை. நோயாளிகளுக்கு எந்த அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டவர்கள் வீடுகளுடன் சேர்த்து 50 வீடுகள் தடுக்கப்படுகின்றன. அவர்களுக்கு தேவையான மளிகைபொருட்கள் வழங்குவதில்லை. மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்று சேரவில்லை.
என்ஆர் காங்கிரஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனையே அதிமுக பாஜக போன்றவையும் வலியுறுத்தின. ஆனால் அதை அரசு காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இருவரும் அதிகார போட்டியை நிறுத்திவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். கவர்னர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.