காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பிரிட்டன் எம்.பி - பாகிஸ்தானின் நிதியை பெற்று வேலை செய்தது அம்பலம்.!
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பிரிட்டன் எம்.பி - பாகிஸ்தானின் நிதியை பெற்று வேலை செய்தது அம்பலம்.!

பிரிட்டன் எம்.பி.- டெபி ஆபிரகாம்ஸ், இந்திய விரோத அரசியல் ஆர்வலரும், காஷ்மீர் தொடர்பான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான டெபி பாகிஸ்தானில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கி வேலை பார்க்கும் மோசடி கும்பல் என இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி, ஆபிரகாம்ஸ் 30 லட்சத்தை பாகிஸ்தானிடம் இருந்து வாங்கிக்கொண்டுஇந்தியாவுக்கு எதிராக பல வேலைகளை செய்து வருகிறார் என்று ஏசியன்லைட் ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
தொழிலாளர் பாராளுமன்ற உறுப்பினர் டெபி ஆபிரகாம்ஸ் தலைமையிலான "காஷ்மீர் மீதான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழு" 29.7 லட்சம் முதல் 31.2 லட்சம் ரூபாயை பிப்ரவரி 18 முதல் 22 வரை தனது பாகிஸ்தானின் பயணத்தின்போது பெற்றுக்கொண்டு இந்த வேலை செய்து வருகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
APPGK என்பது இங்கிலாந்தில் உள்ள ஒரு பிரத்யேக இந்திய எதிர்ப்பு நாடாளுமன்றக் குழுவாகும், இதன் ஒரே நோக்கம் இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினை பற்றி இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு மற்றும் தொந்தரவு அளிப்பதன் இதன் ஒரே நோக்கம். APPGK தொழிலாளர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களையும், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.மேலும் காஷ்மீரில் கூறப்படும் "மனித உரிமை மீறல்களை" முன்னிலைப்படுத்துவதைத் தவிர இங்கிலாந்து எம்.பி.க்களிடமிருந்து கூடுதல் ஆதரவை நாடுகின்றனர்.
பிப்ரவரி மாதம் டெபி இந்தியாவுக்குள் நுழைய முற்பட்டபோது அவரை உள்ளே வர அனுமதி மறுத்தது ஏனெனில் அவரது விசாவில் சில குறைபாடுகள் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது என்று இந்தியாகூறியது., மேலும் இவர் சர்வதேச பிரச்சினையாக முடிவு செய்தார் மேலும் இந்தியாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை இதன் மூலம் எடுக்க தொடங்கினார் இதற்கு தான் இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் MEA செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது, "அவரது அறிக்கைகள் மற்றும் எண்ணங்கள் இந்தியாவுக்கு எதிரானவை என்று நாங்கள் கருதுகிறோம். இந்தியாவுக்கு எதிராக அவரது தரப்பிலிருந்து ஒரு தொடர்ச்சியான பிரச்சாரம் உள்ளது ... அவர் செல்லுபடியாகும் விசா இல்லாமல் இங்கு வந்தார், எனவே நாங்கள் அவரை டெல்லி விமான நிலையத்திலிருந்து நாங்கள் திருப்பி அடிப்போம் என்று கூறினார்.
கடந்த ஆண்டு 370 வது பிரிவை ரத்து செய்து காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைத்து மோடி அரசு, இதற்கு டெபி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக இந்தியாவில் தனித்து விட அவர் பல தீய வேலையை கையில் எடுத்தார். காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறியதாகவும், புது தில்லியின் நகர்வுகளுக்கு தற்காலிக தடை விதிக்குமாறு இங்கிலாந்துக்கு கோரிக்கை விடுத்ததாகவும்,இதற்கு மேலும் பல நாடுகள் ஆதரவு தரவேண்டும் என்று கூறியது ஆனால் இந்தப் பிரச்சினையை உலக நாடுகள் முழுவதும் இந்தியாவுக்கு பக்கபலமாக இருந்த காரணத்தால் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் டெபியின் இந்த சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டது.
இதற்கு பின்னால் பாகிஸ்தான் தான் இருக்கிறது என்று இப்பொழுது அம்பலப்படுத்துகிறது ஏசியன்லைட்.