Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தானில் கடைசி சுவாசத்தில் காங்கிரஸ் ஆட்சி : சச்சின் பைலட் டெல்லியிலிருந்து வெளியிட்ட ஆதரவாளர்கள் வீடியோவால் தேசிய அரசியலில் பரபரப்பு.!

ராஜஸ்தானில் கடைசி சுவாசத்தில் காங்கிரஸ் ஆட்சி : சச்சின் பைலட் டெல்லியிலிருந்து வெளியிட்ட ஆதரவாளர்கள் வீடியோவால் தேசிய அரசியலில் பரபரப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 July 2020 6:51 AM GMT

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டி சண்டையால் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சட்ட சபை தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அசொக்கேலாட்டின் பெயரும், சச்சின் பைலட்டின் பெயரும் அடிபட்டன. மாநிலத்தில் உள்ள அதிக காங்கிரசார் மற்றும் இளைஞர் காங்கிரசார் நன்கு படித்த இளைஞரும் ,வேகமாக செயல்படுபவருமான சச்சின் பைலட்தான் முதல்வரவார் என விரும்பினர். பைலட்டும் மிக தீவிரமாக தேர்தல் பணியாற்றினார் என கூறப்படுகிறது.

ஆனால் சோனியாவும், ராகுலும் மாநிலத்தில் செல்வாக்குடைய சச்சின் பைலட்டை பின்னுக்கு தள்ளிவிட்டு தங்கள் குடும்ப விசுவாசியான அசோக் கேலாட்டை முதல்வராக்கினர்.

ஏற்கனவே பா.ஜ.க-வுக்கு நெருக்கமான இடங்களை மட்டுமே பெற்று குறைந்த பெரும்பான்மையில் காங்கிரஸ் காலத்தை ஒட்டி வந்த நிலையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் அடிக்கடி பல விவகாரங்களில் உட்கட்சி பூசல்களில் ஈடுபட்டார்கள் என கூறப்படுகிறது. அப்போதெல்லாம் அசோக் கெலாட் இது பா.ஜ.க-வின் சதி என்று கூறி வந்தார். பா.ஜ.க அதிருப்தியாளர்களை பயன்படுத்தி ஆட்சி அமைக்க பார்ப்பதாக கூறி வந்தார்.

இந்த நிலையில் பைலட்டுக்கும், கேலாட்டுக்கும் கருத்து வேறுபாடுகள் முற்றிய நிலையில், சென்ற வாரம் எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவருக்கு குறிப்பிட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகவும்,ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-அமைச்சருக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது.

இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்-அமைச்சர் அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பஸ்கள் மூலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச்சென்று தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில ஆதரவாளர்களுடன் ஹோட்டலில் பாதுகாப்புடன் உள்ள சச்சின் பைலட் தனக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது 10 வினாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார். சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News