Kathir News
Begin typing your search above and press return to search.

இராமாயணத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள "தர்மம்" என்ற அனைவருக்குமான செய்தியை மக்கள் பரவச் செய்ய வேண்டும் - குடியரசுத் துணைத்தலைவர்.!

இராமாயணத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள "தர்மம்" என்ற அனைவருக்குமான செய்தியை மக்கள் பரவச் செய்ய வேண்டும் - குடியரசுத் துணைத்தலைவர்.!

இராமாயணத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள தர்மம் என்ற அனைவருக்குமான செய்தியை மக்கள் பரவச் செய்ய வேண்டும் - குடியரசுத் துணைத்தலைவர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 12:29 PM GMT

எல்லாக் காலத்திற்கும் நிலைத்திருக்கும் காவியமான இராமாயணத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள "தர்மம் அல்லது நியாயம்" என்ற செய்தியைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், அந்தக் காவியத்தின் அடிப்படை மதிப்பீடுகளின் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு எம்.வெங்கய்ய நாயுடு இன்று கேட்டுக் கொண்டார்.

"கோயிலைத் திரும்பக் கட்டுதல், மதிப்பீடுகளைப் போற்றுதல்" என்ற தலைப்பில் 17 மொழிகளில் இன்று வெளியிட்ட தனது முகநூல் பதிவில் குடியரசுத் துணைத்தலைவர் ஆகஸ்ட் 5இல் இருந்து அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட இருப்பதற்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தருணத்தை ஒரு கொண்டாட்டமாக குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் இராமாயணத்தின் சாராம்சத்தை சரியான கண்ணோட்டத்தில் நாம் புரிந்து கொண்டால் சமூக ஆன்மீகப் புத்துயிர்ப்புக்கு அது வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார். அவர் இராமாயணத்தை தர்மம் அல்லது நியாயத்தின் பிரத்யேகமான இந்தியப் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு கதை என்று விவரிக்கிறார்.

இந்தத் தருணமானது காலம் கடந்தும் நிற்கும் இராமாயணத்தை நாம் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள உதவுவதாகக் குறிப்பிட்ட திரு.நாயுடு இந்தக் காவியம் நமது கூட்டு விழிப்புணர்வு நிலையின் ஒரு அங்கமாக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார். இராமர் எடுத்துக்காட்டான ஒரு குறிக்கோள் நாயகன் என்றும், அவரது வாழ்க்கையில் வெளிப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள் நேர்மையான மற்றும் பொறுப்பான சமூக ஒழுங்கமைவை நிர்ணயிப்பதற்கு மிகவும் முக்கியமானவை என்றும் திரு நாயுடு விவரித்தார்.

2000 ஆண்டுகள் பழமையான இந்தக் காவியத்தைப் புகழ்ந்த அவர் இராமாயணம் அனைவருக்குமான ஒரு பார்வையை வெளிப்படுத்துவதாகக் கூறினார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றின் கலாச்சாரத்தில் வெளிப்படையான மற்றும் ஆழ்ந்த தாக்கத்தை இந்தக் காவியம் ஏற்படுத்தியுள்ளது.

வேதம் மற்றும் சமஸ்கிருத அறிஞரான ஆர்தர் அந்தோணி மெக்டோனல் என்பரின் மேற்கோளை குறிப்பிட்டுக் காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் இந்தியப் பிரதிகளில் சொல்லப்பட்டுள்ள இராமரின் கருத்துக்கள் உண்மையில் மதச்சார்பற்றவை என்றும் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இவை மக்களின் வாழ்விலும், சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் உள்ள கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், நாட்டியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கற்பனைக்கு ஊற்றுக்கண்ணாக இராமாயணம் இருந்துள்ளது என்று குறிப்பிட்ட திரு.நாயுடு ஜாவா, பாலி, மலாயா, பர்மா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இராமரின் கதை கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்றார்.

இந்தக் காவியம் அனைவரையும் ஈர்க்கும் தன்மையுடன் இருப்பதை எடுத்துக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் தெற்காசியா முதல் தென்கிழக்கு ஆசியா வரை உள்ள பல்வேறு நாடுகளில் இராமாயணம் வெவ்வேறு வடிவங்களில் வழங்கி வருவதை பட்டியலிட்டுக் காட்டினார்.

இந்தக் காவியத்தை ருஷ்ய மொழியில் அலெக்சாண்டர் பரானிகோவ் மொழிபெயர்த்துள்ளார். ருஷ்ய அரங்கக் கலைஞரான ஜென்னடி பெச்னிக்கோவ் என்பவர் தயாரித்த அரங்க வடிவம் மிகவும் புகழ் பெற்றுள்ளது என்று திரு. நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

அங்கோர்வாட் சுவர்களில் இராமாயணக்காட்சிகள் பதிக்கப்பட்டுள்ளதையும், இந்தோனிஷியாவின் பிரம்பனன் கோயிலில் இராமாயணம் கதைப்பாடலாக வழங்கப்படுவதையும் உதாரணங்களாகச் சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் நிலவியல் மற்றும் மத எல்லைகளைத் தாண்டி உலகக் கலாச்சாரத் தளத்தில் இராமாயணம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை எடுத்துக்காட்டினார்.

புத்தமதம், ஜெய்னமதம் மற்றும் சீக்கிய மதம் போன்ற பிற மதங்களும் கூட ஏதோ ஒரு வடிவத்தில் இராமாயணத்தை தங்களுக்குத் தகுந்தவாறு ஏற்றுக் கொண்டுள்ளன என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காவியமானது பல்வேறு மொழிகளில் பல்வேறு வடிவங்களில் மீண்டும் கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு.நாயுடு இவ்வாறு பலதரப்பட்ட மக்களின் கவனத்தையும் ஈர்க்க வேண்டுமென்றால் இந்தக் காவியத்தின் மையக்கருத்திலும் கதையாடலிலும் ஏதோ ஒரு உந்துசக்தி இருக்கவேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

ஒரு மனிதர் தான் கடைபிடிக்க விரும்புகின்ற அனைத்து நற்குணங்களையும் கொண்டவராக இராமர் இருப்பதை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர் இத்தகைய நல்ல குணங்களை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்துகின்ற கதையாக இராமாயணம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

கதை நகரப்புற இந்தியாவின் பல பகுதிகளிலும் இராமரின் பயணம் தொடரத், தொடர உண்மை, அமைதி, நட்புறவு, கருணை, நீதி, அனைவரையும் உள்ளடக்குதல், பக்தி, தியாகம் மற்றும் இரக்கம் போன்றவற்றை உள்ளடக்கிய மதிப்பீடுகள் இராமரிடம் இருந்து வெளிப்படுவதைப் பார்க்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர் இந்த மதிப்பீடுகளின் தொகுதி தான் உலகம் குறித்த இந்தியாவின் பார்வைக்கு அடிப்படையாக உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.

இந்த மதிப்பீடுகள் அனைவருக்குமானவை மற்றும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துபவை என்று குறிப்பிட்ட திரு.நாயுடு இவை தான் இராமாயணத்தை இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமான வழிகாட்டி நூலாக இருக்கச் செய்கிறது என்று குறிப்பிட்டார்.

மகாத்மாகாந்தி இராமராஜ்யம் என்ற உருவகத்தைப் பயன்படுத்தியது குறித்து எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர் கருணை, அனைவரையும் உள்ளடக்குதல், அமைதி, இணையாக இருத்தல், குடிமக்களுக்கு அதிகத் தரத்திலான வாழ்க்கையை அளிக்க வேண்டுமென்ற தணியாத தாகம் போன்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்த, மக்களை மையமாகக் கொண்ட, ஒரு குறிக்கோள் நிலையிலான குடியரசு அரசாட்சி முறையே இராமராஜ்யம் என்று விவரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். நமது குடியரசுக்கான வேர்களை மேலும் ஆழப்படுத்திக் கொள்வதற்கான தேசிய முயற்சிகளில் மேலே கூறப்பட்ட மதிப்பீடுகள் தரநிலைகளாக, வழிகாட்டிக் குறிப்புகளாக, ஊக்கப்படுத்தும் அம்சங்களாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது நமது அரசியல், நீதி மற்றும் நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்தும் செயல்களில் முன்னேறிச் செல்வதற்கு நமக்கு உதவியாக இருக்கும் என்று குடியரசுத் துணைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News