"கட்சிய கவனிங்க தலைவரே!" - ஸ்டாலினினுக்கு மாவட்ட செயலாளர்கள் இட்ட மூன்று கட்டளை!
"கட்சிய கவனிங்க தலைவரே!" - ஸ்டாலினினுக்கு மாவட்ட செயலாளர்கள் இட்ட மூன்று கட்டளை!

தி.மு.க-வில் நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சில பல அதிரடி கோரிக்கைகள் மாவட்ட செயலாளர்கள் மூலம் தனித்தனியே ஸ்டாலினிடம் வைக்கப்பட்டதாக தெரிகிறது.
அதில் முக்கியமாக மூன்று விஷயங்களை கட்சி உடன்பிறப்புகள் இதை செய்தே ஆக வேண்டும் இல்லையேல் 2021 தேர்தலில் ஆட்சியை பிடிக்க இதுவே முட்டுக்கட்டையாக மாறி மக்கள் சக்தி மொத்தமாக தி.மு.க-வுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருப்பதாக மாவட்ட செயலாளர்கள் கட்சி தலைமையிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
முதலில் கட்சியில் பதவிகளுக்கு சரியான ஆட்கள், உதாரணமாக கட்சியில் பல காலம் உழைத்து, காசை வாரி இறைத்து, ஏதாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உழன்று வரும் வயதான ஆட்களை கண்டுகொள்ளாமல் வாரிசுகளை பதவியில் அமர வைப்பது கேட்டால் வெளியில் இளைய ரத்தங்கள் கட்சிக்கு தேவை என சமாளிப்பது சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது முக்கிய கருத்தாகவே தலைமையிடம் தெரிவிக்கபட்டதாம்.
இரண்டாவது, இந்துக்கள் எதிரி தி.மு.க என்பது சாதாரண மக்களுக்கு கூட தி.மு.க எதிரணி கட்சிகள் மூலம் பரவி விட்டது. மேலும் கட்சியின் செயல்பாடுகள் கூட அதனை உறுதி செய்வதால் வரும் தேர்தலில் தி.மு.க எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக இந்துக்கள் வாக்கு வங்கி இருக்கும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மூன்றாவது முக்கிய காரணம் ஐ-பேக் தலைமை, கட்சியை மதிக்காமல் தனியாரிடம் செலவு செய்து மண்டியிடுவதை விட அந்த பணத்தை கட்சி நிர்வாகிகளிடம் கொடுத்தால் கடன் வாங்கி செலவு செய்யும் அவர்களாவது ஆயுள் முழுவதும் தி.மு.க-விற்காக உழைப்பார்கள். இல்லையேல், ஒரு தேர்தல் தோல்வி போதும் எதிரணிக்கு பறந்து விடுவார்கள். எனவே தனியார் கம்பெனியை விட்டுவிட்டு கட்சியை கவனிங்க தலைவரே என வெளிப்படையாகவே ஸ்டாலினிடம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன.
என்ன இருந்தாலும் கட்சிக்காரர்களின் கருத்தை கேட்க கருணாநிதி இல்லையே இவர் ஸ்டாலின் தானே என ஒரு மூத்த உடன்பிறப்பு நொந்துக் கொண்டார்.