உலகளவில் இந்தியாவை அறிவாற்றலில் சிறந்த சக்தியாக புதிய கல்வி கொள்கை உருவாக்கும்- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
உலகளவில் இந்தியாவை அறிவாற்றலில் சிறந்த சக்தியாக புதிய கல்வி கொள்கை உருவாக்கும்- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதிய கல்வி கொள்கை என்பது நாம் என்ன யோசிக்கிறோம், எப்படி யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் எந்தப் பாகுபாடும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
கல்விக் கொள்கை மிக பெரிய சீர்திருத்தத்தைக் கண்டு சிலருக்கு வருத்தம். இந்த கொள்கை சார்ந்தவர்களால் மாணவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பபடவில்லை என்பது தான் உண்மை. இன்றைய நிலையில் வருங்கால மாணவர்கள் தான் புதிய இந்தியாவை உருவாக்கபோகிறார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது.
கல்வியின் சிறந்த நோக்கமே மனிதர்களை உருவாக்குவது தான் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிக்காட்டியுள்ளார். 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெிரிவித்துள்ளார்.