கர்நாடகா : நாளை முதல் ஞாயிறுக்கிழமை மற்றும் இரவு நேரங்களில் ஊரடங்கு கிடையாது.!
கர்நாடகா : நாளை முதல் ஞாயிறுக்கிழமை மற்றும் இரவு நேரங்களில் ஊரடங்கு கிடையாது.!

கர்நாடகாவில் நாளை (ஆகஸ்ட் 1) முதல் அமல்படுத்தப்படும் 3.0 ஊரடங்கில் இரவு மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலில் இருக்காது என்று உயர் அதிகாரிகள் வியாழனன்று (30 ஜூலை) தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சகம் வெளியிட்ட 3.0 அன்லாக் விதிமுறைகளின் படி "ஆகஸ்ட் மாதத்தில் ஞாற்றுக்கிழமைகளில் மற்றும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இருந்த ஊரடங்கு இனி அமலில் இருக்காது." என்றும் மாநிலத் தலைமைச் செயலாளர் T M விஜய பாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகா அரசானது கொரோன வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த ஜூன் 5 முதல் ஞாற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது மற்றும் ஜூன் 14-22 வரை பெங்களூர் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ஒன்பது நாள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
"இந்த முறை ஊரடங்கில் அதிக தளர்வுகளுடன் யோகா மற்றும் உடற்பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் 5 முதல் திறக்க அனுமதிக்கப்படும்" என்று பாஸ்கர் அறிவித்துள்ளார்.
மேலும் வைரஸ் பரவுதலைத் தடுக்க பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மதுபான கூடங்கள், சட்டசபை அரங்கு, பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் முதலியவை ஆகஸ்ட் 31 வரை மூடப்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மாநிலங்களின் நகர்ப்புறங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற கட்டுப்பாடுகள் தொடருமென்று கூறியுள்ளார்.
உள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு மக்கள் சென்றுவர எந்த தடையுமில்லை மற்றும் ஏற்றுமதிகள் செய்ய இ -பாஸ் தேவையில்லை என்றும் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15 குடியரசு தினவிழாவை அனைத்து மாநிலம், மாவட்டங்களில் சமூக விலகல் மற்றும் முகக்கவசங்கள் அணிந்து சுகாதார நெறிமுறைகளுக்கு ஏற்ப கொண்டாடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
source: https://swarajyamag.com/insta/karnataka-to-do-away-with-sunday-lockdown-night-curfew-from-1-august-under-unlock-30