Kathir News
Begin typing your search above and press return to search.

"நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.!

"நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.!

நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 11:23 AM GMT

சர்வதேச நண்பர்கள் தினம் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கொண்டாடப்பட்டது ஆனால் இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தான் நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு முன்பே வந்ததையடுத்து இரு தினங்களும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் இன்று கொண்டாடி வருகின்றனர் அதனை அடுத்து இந்த போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு "நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன். #HappyFriendshipDay2020# என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நாளில் நட்பை பற்றிய படத்தின் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். மீசைய முறுக்கு என்ற படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த நடிகர் ஆனந்த் இயக்கும் அறிமுக படம் *நண்பன் ஒருவன் வந்த பிறகு* இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்.ஜே.விஜய் மற்றும் நாயகியாக பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒயிட் ஃபெதர் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நண்பர்கள் தின பரிசாக நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்நிலையில் இவரது ரசிகர்கள் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் இவரது ரசிகர்கள் நண்பர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ்யின் தங்கை ஸ்ரீ பவானி கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படம் 1992 முதல் இன்ஃபினிட்டி என்ற சிம்பிளும் டைட்டிலில் இடம்பிடித்து இருப்பதால் இந்த படம் 90's கிட்ஸ்களுக்கான படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News