மரத்தில் மோதிய கார் - பிரபல நடிகை படுகாயம்.!
மரத்தில் மோதிய கார் - பிரபல நடிகை படுகாயம்.!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகை ரிஷிகா சிங் இவர் கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இந்த செய்தி திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னட சினிமாவில் மிகவும் வளரும் நடிகையாக இருந்து வருபவர் ரிஷிகா சிங். கன்னட சினிமாவில் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் சகோதரர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது சகோதரர் ஆதித்யா நடிகராகவும் இவரது தந்தை ராஜேந்திர சிங் பாபு இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
ரிஷிகா சிங் கன்னடத்தில் கண்டீரவா எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கன்னடத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற இருக்கிறார்.நேற்று ரிஷிகா பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று வந்த போது ரிஷிகாவின் கார் கட்டுப்பாட்டை மீறி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்தக் கார் பெங்களூர் அருகே மவல்லிபுரா எனுமிடத்தில் மரத்தில் மோதி விபத்தானது. அந்த விபத்தில் காரின் முன்புறம் நொறுங்கி சேதமடைந்து இருக்கிறது.
இதனால் காரின் முன்புறம் இருந்த ரிஷிகா படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார் அவர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்ப இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று கருதப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் அவர் மீண்டும் வருவார் என கூறுகின்றனர்.