இது வந்தால் தனியார் பள்ளிகள் எல்லாம் மூலையில் நிற்க வேண்டும்! அரசியல் சதியால் தமிழகத்தை எட்டிப்பார்க்காமல் போன நவோதயா பள்ளிகள்!
இது வந்தால் தனியார் பள்ளிகள் எல்லாம் மூலையில் நிற்க வேண்டும்! அரசியல் சதியால் தமிழகத்தை எட்டிப்பார்க்காமல் போன நவோதயா பள்ளிகள்!

தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன. நமக்கு அருகில் என்றால், புதுச்சேரியில் நவோதயா பள்ளி உண்டு.
1986-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை வெளியான பிறகு. மத்திய அரசு 'ஜவஹர் நவோதயா பள்ளிகள்' என்ற பெயரில் மாதிரி பள்ளிகளைத் தொடங்கியது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை உள்ள இந்தப் பள்ளியில், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும்.
8-ம் வகுப்புவரை பயிற்று மொழி, தாய்மொழி அல்லது மாநில மொழியாக இருக்கும். அதன்பிறகு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் வழியாகவும் சமூக அறிவியல் பாடங்கள் இந்தி அல்லது ஆங்கிலம் வழியாகவும் பயிற்றுவிக்கப்படும்.
முழுவதும் மத்திய அரசின் நிதியில் இயங்கும் இந்தப் பள்ளிகள் இருபாலாரும் பயிலும் உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. உணவு, சீருடை, பாடநூல்கள் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படும்.
9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 600 ரூபாய் பெறப்படுகிறது. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.
அரசு ஊழியர்களின் பிள்ளைகள் எனில், மாதந்தோறும் ரூபாய் 1,500 அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெறுகின்ற குழந்தைகள் கல்வி உதவித் தொகை இவற்றில் எது குறைவானதோ அது வசூலிக்கப்படும்.
தமிழகம் நீங்கலாக, இந்தியா முழுக்க தற்போது 636 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. நவோதயா பள்ளிகள் குறித்த விரிவான தகவல்களை https://navodaya.gov.in/nvs/en/Home1/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
நவோதயா பள்ளியில் படித்த 14183பேர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினர். அதில் 11857பேர் தேர்ச்சி பெற்றனர். 7000பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
ஒரு நவோதயா பள்ளியில் ஒரு வகுப்புக்கு 80 பேர் என்றால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 560 பேர் படிக்கலாம். தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களுக்கும் என்றால், 19,600 மாணவர்கள் பலன் அடைவார்கள். ஆனால் இங்கு நடந்த அரசியல் சதியால், தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளிகள் கூட இல்லை என்பது வேதனையான விஷயம். இனியாவது வருமா என்று பார்க்கலாம்.