நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் "இசை ஆல்பம்" வெளியிடும் ஹிப்ஹாப் தமிழா ஆதி.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் "இசை ஆல்பம்" வெளியிடும் ஹிப்ஹாப் தமிழா ஆதி.!

சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது ஒரு நடிகராகவும் இவர் நடித்துவருகிறார். நடிகரும் இசையமைப்பாளருமான ஆதி தற்போது "நான் ஒரு ஏலியன்" என்ற இசை ஆல்பத்தை வெளியிட உள்ளார். இவர் சுயாதீன் ஆல்பங்கள் வெளியிடுவதன் மூலம் இவர் புகழ் பெற்றார். அதன்பின் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன அதனிடையே தனி ஒருவன், இன்று நேற்று நாளை, கதகளி இமைக்காநொடிகள், ஆசான், அரண்மனை,துருவா,கோமாளி போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதன்பின் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் மாறினார். அடுத்தடுத்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கொரோனா காரணமாக இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை அதனை அடுத்து ஆல்பம் பக்கம் திரும்பியுள்ளார். இவர் நான் ஒரு ஏலியன் என்ற இசை ஆல்பத்தை உருவாக்கினார். இந்த இசை ஆல்பத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி தீம் மியூசிக் நிறுவனம் சுதந்திர தினத்தன்று வெளியிட போகிறது என தகவல் வந்துள்ளது.