Kathir News
Begin typing your search above and press return to search.

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்த முடிவு..!

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்த முடிவு..!

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்த முடிவு..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Aug 2020 8:38 AM GMT

நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம்(PLI) மேலும் ஐந்து அல்லது ஆறு துறைகளுக்கு விரிவுபடுத்த அரசாங்கம் முன்மொழிகிறது.

அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு உற்பத்தி பகுதிக்கும் (PLI) திட்டம் அதன் வரையறைகளை நிதி அமைச்சகம் மற்றும் பிற அமைச்சர்களுடன் தீர்மானம் செய்து வருவதாகவும் அடுத்த சில வாரங்களில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய துறைகளுக்கான (PLI) திட்டம் நாட்டில் மொபைல் உற்பத்தி துறையின் சூழலை மேம்படுத்துவதற்காக மொபைல் உற்பத்தித் துறைக்கு மின்னணு அமைச்சகம் அறிவித்ததை போன்ற ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறை அமைச்சகம் மருந்து உற்பத்தித் துறைக்கு அறிவித்த திட்டத்தை போன்று இந்த (PLI) உற்பத்தியுடன் அமைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் அமையும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏப்ரல் 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வணிக ஏற்றுமதி திட்டம் (MEIS) இந்தத் திட்டத்திற்கு பதிலாக புதிய திட்டம் செயல்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தில் ஏற்றுமதி பொருட்கள் தேக்க நிலையிலேயே இருந்தன எனவே அரசாங்கம் இப்போது டிசம்பர் மாதத்திற்குள் அதை நிறுத்த விரும்புகிறது என்று கூறப்படுகிறது.

(MEIS) வணிக ஏற்றுமதி திட்டத்தில் கீழ் கடன்சுமை 2019-20 ஆம் ஆண்டில் 20 ஆயிரம் கோடியிலிருந்து சுமார் 45 ஆயிரம் கோடியாக உயர்ந்து நீடித்த நிலையை எட்டவில்லை. 2014-15 ஆம் ஆண்டில் இந்திய ஏற்றுமதி 310 பில்லியன் டாலர்களாகவும், 2019-20 ஆம் ஆண்டில் ஏற்றுமதி எண்ணிக்கை 313 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது. வணிக ஏற்றுமதி திட்டம்(MEIS) நிதியாண்டில் 9,000 கோடி ரூபாயாக கட்டுப்படுத்துவதுடன் சேமிப்புகளை (PLI)திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் டிவி செட் உற்பத்தியை அதிகரிப்பதற்காக (PLI) திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாட்டில் ஓரளவு உற்பத்தி உள்ள நிலையில் இன்னும் நிறைய பாகங்கள் இறக்குமதி செய்கின்றனர்.

தற்போது சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இதே போன்ற திட்டமும் உள்ளது.

இந்தியாவில் கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) டயர்கள், ரசாயனங்கள், தளபாடங்கள் மற்றும் பொம்மைகள் போன்ற துறைகளில் உலகெங்கிலும் 'மேட் இன் இந்தியா' பொருட்கள் உலகமெங்கும் சென்றடையும் வகையில் பல துறைகளையும் அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல துறைகளுக்கான (PLI) திட்டம் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தயாராக இருக்கும் மொபைல் உற்பத்தி திட்டம் (PLI) 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களில் கூடுதல் விற்பனையை பொருத்து 4-6 சதவீதம் ஊக்கத்தொகை வழங்குகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News