Kathir News
Begin typing your search above and press return to search.

கோத்ராவில் உயிருடன் எரிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ராமர் கோயில் பூமி பூஜைக்கு வரவேற்பு.!

கோத்ராவில் உயிருடன் எரிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ராமர் கோயில் பூமி பூஜைக்கு வரவேற்பு.!

கோத்ராவில் உயிருடன் எரிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ராமர் கோயில் பூமி பூஜைக்கு வரவேற்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 7:04 AM GMT

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூமி பூஜை விழா அயோத்தியில் நல்ல முறையில் நடந்து முடிந்தது. ராமர் கோயில் கட்டப்பட்டதை அதிகாரப்பூர்வமாக குறிக்கும் நிலையில் 2002இல் நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் உறவினர்களை இழந்த குடும்பங்கள் இந்த முயற்சியை பெரிதும் வரவேற்றுள்ளனர். தங்களது தியாகங்களுக்கே இறுதியாக பலன் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்கள்.

குஜராத்தின் கோத்ராவில் பிப்ரவரி 28,2002 அன்று, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 59 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். தடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூரமான சம்பவம் நடந்து 18 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் கோத்ரா ரயில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் இன்னும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.‍

தங்களது இழப்புகளை எண்ணி வருத்தத்தில் இருக்கும் இவர்களுக்கு,ராமர் கோயிலின் பூமிபூஜை நிகழ்வு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்ரா தீயில் இருந்து தப்பிய ஒருவரான ஜெயந்தி பாய், ரயில் தீக்கிரையான போது தனது தாயை இழந்தவர். அவர் தனது தாயின் தியாகங்கள் வீணாகவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

"கோத்ராவில் நடந்த சம்பவத்திற்கு யாரும் எந்த வெறுப்பையும் கொண்டிருக்கவில்லை, இது ராமருக்கான தியாகம்தான் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறிய அவர் "கோயில் கட்டுமானத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கொரோனா தொற்று நோய் இல்லாதிருந்தால் இந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாகியிருக்கும்," என்றும் கூறியுள்ளார்.

வாத்நகர் மாவட்டத்தின் மெஹ்சானா பகுதியைச் சேர்ந்த நவீன்சந்திர பிரம்மபட் (65) ராமரை தரிசனம் செய்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது தன் மனைவியை கோத்ரா சம்பவத்தில் இழந்தவர். பூமி பூஜை நிகழ்வதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அவர் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் முடிந்தவுடன் அவரது இரண்டு மகன்களுடன் அயோத்தி செல்லவிருப்பதாக கூறினார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தனது மகன் ராகேஷை இழந்த 80 வயது முதியவர் சர்தார்ஜி வகேலா, "அவர்கள் பூமி பூஜையை மேற்கொள்ளும்போது நான் வழிபாடு செய்வேன். எங்கள் தியாகங்கள் அனைத்துக்கும் இறுதியாக பலன் கிடைத்துள்ளது" என்று கூறியிருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News