Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் இணையும் தளபதி விஜய் - அட்லி கூட்டணி, அப்படி என்ன படமாக இருக்கும்.?

மீண்டும் இணையும் தளபதி விஜய் - அட்லி கூட்டணி, அப்படி என்ன படமாக இருக்கும்.?

மீண்டும் இணையும் தளபதி விஜய் - அட்லி கூட்டணி, அப்படி என்ன படமாக இருக்கும்.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 9:14 AM GMT

இயக்குனர் அட்லி மற்றும் தளபதி விஜய் ஆகியோர் இணைந்து இருவரும் ஒரு படம் பண்ணப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்கள் இணைந்து ஏற்கனவே மெர்சல்,பிகில், தெறி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பார்த்தன. இந்த மூன்று படங்களும் அதிக வசூலை கொடுத்தது அதனை அடுத்து தற்போது நான்காவதாக கூட்டணி சேர போகின்றனர். ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் தளபதி விஜய்க்கு அட்லி சிறிய கதை கூறியதாகவும் அந்தக்கதை விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாலும், அந்தக் கதையை ஒரு முழு ஸ்கிரிப்டாக ரெடி பண்ணுமாறு தளபதி விஜய் கூறியதாக அட்லி கூறினார்.

விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கும் 65வது படத்திலும், இயக்குனர் வெற்றிமாறனுடன் 66வது படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு, பிறகு அட்லீயின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜயின் வெற்றிப்படமான பிகில் படத்தை இந்தியில் எடுக்கப் போவதாகவும் அந்தக்கதையை ஷாருக்கான் இடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதனை அடுத்து கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தகவல் வெளியாக உள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக ஷாருக்கானின் பிறந்தநாளன்று வெளியாகும் என கருதப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News