சர்வதேச திரைப்பட விழாவில் "கைதி" படம் -மகிழ்ச்சியில் படக்குழுவினர்.!
சர்வதேச திரைப்பட விழாவில் "கைதி" படம் -மகிழ்ச்சியில் படக்குழுவினர்.!

2019ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி ஆக்க்ஷன் படமான கைதி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கவரப்பட்டது. உலக அளவில் மிகப் பிரபலமான விழாக்களில் ஒன்றான சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய அளவில் வெற்றியைக் கண்ட படம் 'கைதி' திரையிடப்படவுள்ளது. இந்த விழா டொராண்டோவில் உள்ள இடத்தில் ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியால் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் இந்த செய்தியை பதிவிட்டிருக்கிறார். அவர் ட்விட்டரில் இந்தப் படத்தின் வெற்றிக்கு இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். கைதி படத்தில் நடிகர் கார்த்திக் தீனா, அர்ஜுன் தாஸ்,நரேன், ஜார்ஜ் மரியன் ஆகியோர் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர் என்ற பேனரின் கீழ் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் ஆகியோர் இதை தயாரித்து இருக்கின்றனர். மேலும் விவேகானந்தர் பிக்சர் என்ற பேனரின் கீழ் திருப்பூர் விவேக் இவர் இணைந்து தயாரித்துள்ளனர். மிகப்பெரிய வெற்றிப் படமான இந்த படத்தை ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டுவருகிறது.
வித்தியாசமான கதைக்களத்தில் உள்ள இப்படத்தை இயக்குனர் லாவகமாக விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் இதற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் "கைதி" படத்தின் பெருமைகளை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது.