உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி.!
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி.!
By : Kathir Webdesk
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்யச் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கு COVID -19 குழுவினர் சனிக்கிழமை அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரனா வைரசிற்கு எதிராகப் போராடுவதற்கு வென்டிலேட்டர்கள் தேவை அதிகமிருந்ததால் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கொண்டுள்ள முடிவில் உள்நாட்டின் வென்டிலேட்டர்களின் உற்பத்தியாளர்கள் வெளிநாடு சந்தைகளில் அதிக இடத்தை பெற முடியும். தற்போது 0.22 சதவீத நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவையில் உள்ளனர்.
"மேலும், உள்நாட்டில் வென்டிலேட்டர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது தற்போது 20க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பெருகியுள்ளனர்," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவானது, இந்தியாவில் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கில் தொடர்கிறது. தற்போது 2.15 சதவீத நோயாளிகளே உள்ளனர் மேலும் குறைந்த அளவிலே வென்டிலேட்டர் தேவையுள்ள நோயாளிகள் உள்ளனர். ஏற்றுமதி செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வெளிநாடு வர்த்தகத்தின் இயக்குநருக்கு ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கையின் படி புதியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் 55,117 ஆகவும் இது மொத்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,12,171 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 854 பேர் COVID -19 ஆல் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 37,405 ஆக உள்ளது.
Source: https://swarajyamag.com/insta/centre-permits-export-of-made-in-india-ventilators-as-manufacturing-capacity-increases