Kathir News
Begin typing your search above and press return to search.

அசாம் : பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரானா பரிசோதனை.!

அசாம் : பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரானா பரிசோதனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 6:21 AM GMT

அசாம் மாநிலத்தில் செப்டெம்பர் 1 முதல் கல்வி நிலையங்களைத் திறக்கவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கட்டாயம் COVID-19 சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.

அசாம் சுகாதார மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சனிக்கிழமை அன்று குவாஹாட்டியில் கொடுத்த அறிக்கையில், கல்வி நிலையங்கள் திறக்க ஒரு வாரத்திற்கு முன்னதாக அதாவது ஆகஸ்ட் 23 முதல் 30 வரை அனைத்து கல்வி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் covid -19 பரி சோதனை செய்து கொள்ள வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நான்காம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளிகளைத் திறக்கவுள்ளோம் இது முற்றிலும் covid-19 சூழ்நிலை மற்றும் மத்திய அமைச்சகத்தின் முடிவைப் பொறுத்ததே ஆகும். செப்டெம்பர் 1 முதல் கல்வி நிலையங்களைத் திறக்கக் கூடிய சூழ்நிலையில், கொரோனா வைரஸ் மேலும் பரவாமலிருக்க COVID-19 பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று சர்மா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காலகட்டங்களில் ஏற்கனவே படிப்பு பாதித்தநிலையில், கிராமப்புறங்களில் மைதானங்கள் மற்றும் திறந்தவெளிகளில் வகுப்பறைகள் அமைக்கவுள்ளதாக மாநில கல்வி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

" நகர்ப்புறங்களில் ஏற்கனவே இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகின்ற நிலையில் கிராமப்புறங்களில் அப்படியெதுவும் எடுக்காத சூழ்நிலையில், பள்ளிகளைத் திறப்பதை விடுத்து திறந்தவெளி வகுப்பறைகள் எடுக்க முடிவுசெய்துள்ளோம். பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவ அதிகம் வாய்ப்புள்ளதால், முந்தைய காலத்தில் மேற்கொண்ட குருகுலம் நடைமுறையை மேற்கொள்ளவுள்ளோம். ஒரு வகுப்பறைக்கு மாணவர்கள் 15 பிரிவினராகப் பிரிக்கப்படுவர் மேலும் தலைமை ஆசிரியரும் கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வி கற்க உதவலாம் ", என்று சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நடைமுறை கட்டாயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்குநாட்கள் எடுக்கப்படும். மேலும் அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படாது என்றும் மூன்று மணி நேரத்தில் அனைத்து வகுப்புகள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் இதுவரை 40,269 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. வெள்ளியன்று 11,088 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் 98 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அம்மாநிலம் தெரிவித்துள்ளது.



source: https://www.deccanherald.com/national/east-and-northeast/covid-19-assam-plans-mandatory-test-for-teachers-staffs-before-re-opening-educational-institutes-868428.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News