Kathir News
Begin typing your search above and press return to search.

ஆரியர்-திராவிடர் வாதம் உருவான வரலாறு - மிஷன் காளி இயக்கம்.!

ஆரியர்-திராவிடர் வாதம் உருவான வரலாறு - மிஷன் காளி இயக்கம்.!

ஆரியர்-திராவிடர் வாதம் உருவான வரலாறு - மிஷன் காளி இயக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 12:46 PM GMT

காமராஜர் தோற்று திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுள்ள கல்விகொள்கை எதிர்ப்புவரை தமிழகம் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிநாதமாக இருப்பது ஆரியர் படையெடுப்பு திராவிடர் ஒடுக்கம் என்கிற இரண்டு கொள்கைகள் தான்.

இவற்றின் ஊற்றுக்கண் 1835ல் வெளியான On the Conjugation System of Sanskrit in comparison with தட் of Greek, Latin, Persian and Germanic என்கிற ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை. இந்த கட்டுரையை எழுதியவர் Franz Bopp எனும் ஜெர்மானியர். இவர் சமஸ்க்ருதம், லத்தீன், ஜேர்மனிய, பாரசீக, கிரேக்க மொழிகளிடையே இருக்கும் இலக்கண மற்றும் ஒலிக்குறிப்பு ஒற்றுமையை பார்த்தார். இந்த ஒற்றுமைக்களின் அடிப்படையில் இவை ஒரே பண்டை மொழியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்தார்.

இது ஒரு அடிப்படை கட்டமைப்பு. இதன்மேல் எப்படி ஆரியர் என்கிற வார்த்தை ஏற்றப்பட்டது என்று புரிந்துகொள்ள நாம் மேற்கத்திய நாகரீகத்தின் ஆரம்பப்புள்ளிக்கு செல்லவேண்டும். மேற்கத்திய நாகரீகம் கிரேக்க ரோமானிய காலங்களில் துவங்கியது. ரோமானிய சாம்ராஜ்யம் ஐரோப்பா முழுவதும் விரிவடைந்தது. அப்படி விரிவடைய காரணம் அவர்களிடம் இருந்த போர், கட்டுமானம், சட்ட அமைப்பு போன்ற தொழில்நுட்பங்கள். இந்த தொழில்நுட்பங்களை அவர்கள் கைப்பற்றிய ஐரோப்பிய இனங்களுக்கு கொடுத்தனர். அந்த இனங்களில் முக்கியமான ஐந்து இனங்கள் Huns,Franks, Vandals, Saxons, Visigoths. இவர்களை ஆள்வதற்கு ரோமானியர்கள் சொன்ன காரணம், "இவர்கள் காட்டுமிராண்டிகள். வாழத் தெரியாதவர்கள். இவர்களை நாம்தான் முன்னேற்ற வேண்டும். நாகரீகம் கொடுக்க வேண்டும்".

இப்படி போர்கருவிகள் முதல் கட்டுமானம் கலை வரை எல்லா விஷயங்களையும் ரோமானியர்களிடம் இருந்து இந்த ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் கற்றனர். ஆனால் ரோம் இவர்களை அளவுக்கதிகமாக சுரண்டியது. இதனால் இவர்கள் ரோமானிய அதிகாரத்தை எதிர்க்கத் துவங்கினர். ரோமானிய சாம்ராஜ்யம் உள்பூசல்கள், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் என்று பல காரணங்களால் ஆட்டம் கண்டது. அதே நேரத்தில் இந்த ஐரோப்பிய இனங்கள் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை தாக்கத் துவங்கின. உள்ளே பலவீனம், வெளியே தாக்குதல் என்று ரோமானிய சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்தது. மேற்கத்திய சரித்திரத்தில் அடுத்த அத்தியாயம் துவங்கியது. காட்டுமிராண்டிகள் என்று ரோமானியர்களால் அழைக்கப்பட்ட இந்த இனங்கள் தங்கள் சாம்ராஜ்யங்களை உருவக்கிக் கொண்டன. அவைதான் ஐரோப்பிய அரசுகளான பிரிட்டிஷ், ஜெர்மனி, டச்சு, பிரெஞ்சு போன்ற சாம்ராஜ்யங்கள். இதன்பிறகு இவர்களுக்கு இடையிலும் பல சண்டைகள் நடந்து, Black Death என்று அழைக்கப்பட்ட கொள்ளை நோய் வந்து இருண்ட காலத்துக்குள் சென்றன ஐரோப்பிய நாடுகள். இது ஒருவழியாக முடிந்து, புத்தெழுச்சி காலம் துவங்கியது. இந்த புத்தெழுச்சிக்கு இவர்கள் ரோமானிய புத்தெழுச்சி Roman Renaissance என்று பெயரிட்டனர்.

அதாவது, ரோமானியர்கள் போலவே கலை, ரோமானியர்கள் போலவே கட்டிடம், இலக்கியம், அறிவியல், அரசியல் எல்லாம் மீண்டும் உருவாக்கும் கனவு. அப்படி கலை, இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முன்னேற்றமும் ஏற்பட்டது. ஆனால், அந்த கனவில் ஒரே ஒரு பகுதி மட்டும் முழுமைபெறவில்லை.

அது ரோமானியர்கள் எப்படி இவர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த காலத்தில் இவர்களுக்கு நாகரீகம் கொடுத்தார்களோ அதேபோல இவர்களும் யாருக்காவது கொடுக்க வேண்டும் எனும் கனவு. இதை ஐரோப்பாவுக்கு உள்ளேயே செய்ய முடியாது. ஏற்கனவே சிலுவைபோர்கள் மூலமாக இவர்கள் அரேபிய, பாரசீக, துருக்கி ஆகிய மக்களுடன் தொடர்பில் இருந்தனர். அந்த மக்கள் தங்களை விட நிறம் குறைந்தவர்கள் என்பதால் கீழானவர்கள் என்னும் எண்ணம் காலம்காலமாக இவர்கள் ரத்தத்தில் ஊன்றிய ஒன்று.

இதன் அடிப்படையில், ஆப்பிரிக்கா, ஆசியா (அதில் குறிப்பாக இந்தியா), அமேரிக்கா போன்ற இதர கண்டங்களை ஆட்சி செய்து நாகரீகத்தை கொடுக்க முடிவெடுத்தனர். இந்த விஷயத்தில் இதர இடங்களில் எல்லாம் இவர்கள் காணாத ஒரு கட்டமைப்பு இந்தியாவில் இருந்தது. இந்தியர்கள் தங்களின் வரலாற்றை மிகவும் துல்லியமாக உணர்ந்து இருந்தனர். அதைவிட சிக்கல், அந்த வரலாறு கிரேக்க சாம்ராஜ்ஜியத்துக்கு பல நூற்றாண்டுகள் முன்னால் துவங்கியது. இப்போது "நாங்கள்தான் உலகிலேயே பழைய நாகரீகம்!" எனும் மேற்க்கத்திய வாதம் இங்கே செல்லுபடியாக வழியில்லை. ஆனால் உலகத்திலேயே அதிகமான செல்வவளம் கொண்ட நாட்டையும் விடுவதற்கு அவர்களுக்கு மனம் இல்லை. அதைவிட, தங்களைவிட நிறத்தில் குறைந்த இந்தியர்களை உயர்ந்தவர்கள் என்று ஒப்புக்கொள்ள ஐரோப்பியர்களின் நிறவெறி இடம்கொடுக்கவில்லை.

இதற்கு அவர்கள் கண்ட தீர்வு ஒரு பொய். முதலில் சொன்ன மொழிகளுக்குள் இருக்கும் அடிப்படை இலக்கண ஒற்றுமையை வைத்து, ஒரு பண்டைய மொழி இருந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்படி ஒரு மொழி இருந்தால் அது "ஆரிய மொழி". அந்த மொழியை பேசிய ஒரு இனம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த இனம் "ஆரிய இனம்". அப்படி ஒரு இனம் இருந்தால் அது உலகிலேயே தலைசிறந்த கண்டமான ஐரோப்பாவில்தான் வசித்திருக்க வேண்டும். அதனால் இங்கே உள்ள அனைத்து நல்ல விஷயங்களும் ஆரியர்கள் கொண்டுவந்தது. ரோமானியர்கள் எப்படி ஐரோப்பாவை ஆட்சி செய்து சீர் செய்தார்களோ அப்படி இங்கே இருந்த திராவிட மக்களை ஆரியர்கள் சீர் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கினர்.

இந்த கட்டமைப்பில் ஒரே ஒரு கருத்து மட்டும்தான் உண்மை. அதற்கு மேலே எல்லாமே "இருந்திருக்க வேண்டும்" எனும் ஊகம்தான். ஆனால் இவை எதுவுமே இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. இப்படி நிரூபிக்காமல் ஒரு ஊகத்தில் இருந்து இன்னொரு ஊகத்துக்கு சென்றால், அதன் பெயர் "பொய்".

இதற்கு கப்ஸா, டகுல், ரீல் என்னும் பண்டைய தமிழ்பெயர்களும் உண்டு. இதுதான் மொத்த ஆரியர் படையெடுப்பு சித்தாந்தத்தின் உண்மை நிலை. ஆனால், தந்திரத்தாலும் அராஜகத்தாலும் நம்மை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் இதை அசைக்கமுடியாத உண்மையாக நமது சிந்தனையில் திணித்துவிட்டனர்.

கலிவிருத்தம் முற்கால காட்டான் முன்னேறி வந்தானாம் தற்கால காட்டனை எங்கேன்னு கேட்டானாம் கற்காலம் முதல்துவங்கி காட்டானாய் இல்லாம பொற்காலம் பலகண்ட நம்நாட்டைக் கண்டானாம்

கண்டவுடன் தடுமாறி கண்பிதுங்கி நின்னானாம் கண்டபடி பொய்கூறி கள்ளவேலை செஞ்சானாம் துண்டாடும் பேச்செல்லாம் துல்லியமா மறைகழண்ட மண்டுக்கள் நம்பட்டும் மதியுள்ளோர் நம்பமாட்டோம்

ஐரோப்பியர்கள் தங்களது தாழ்வு மனப்பான்மையைமறைப்பதற்காக இந்துக்களை தாழ்த்தப்பட்டவர்களாக போலியாக சித்தரித்தது தான் திராவிட வரலாறு!

- ராகவ்

#காளிஇயக்கம்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News