Kathir News
Begin typing your search above and press return to search.

தேச விரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பாயும்! ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அதிரடி!

தேச விரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பாயும்! ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அதிரடி!

தேச விரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பாயும்! ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அதிரடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 8:27 AM GMT

ஜம்மு - காஷ்மீர் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை ஒரு குழுவை அமைத்து தேசிய விரோத நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் ஊழியர்களை அவர்களின் பணியிலிருந்து நீக்கம் செய்யப் பரிந்துரைத்தது என்று தி ட்ரிப்யூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் அரசு அறிக்கையின்படி தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்களையும் இக்குழுவில் நிர்ணயித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையினரால் பரிந்துரைக்கப்படும் தேசவிரோத நடவடிக்கையில் பங்கெடுக்கும் ஊழியர்களின் வழக்குகளையும் இக்குழுவானது கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்று அறிக்கை கூறுகிறது. தேசவிரோத செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 311 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

குழுவின் பரிந்துரையின்படி வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ தேசிய விரோத செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலி கணக்குகளை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துக்களை பரப்பும் பணியாளர்கள் மீதும், ஏற்கனவே தேசிய விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதியலாம் என இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமான செயல்பாடுகளில் பஙகெடுக்கும் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அத்தகைய வழக்குகள் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் ஆராயப்பட்டு பொது நிர்வாகத் துறைக்கு பரிந்துரைக்கப்படும்.

மேலும் புலனாய்வு அறிக்கை மற்றும் பிற சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் தங்கள் வழக்கினை எடுத்துக் கொள்வர். பின்னர் அத்தகைய ஊழியர்கள் பணிபுரியும் துறை அவர்களை இடைநீக்கம் அல்லது பணிநீக்கம் செய்ய உத்தரவுகளை பிறப்பிக்கும் என கூறப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகள் மீது புகார்

தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்களின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. காவலர்களின் செயலற்ற தன்மை மற்றும் அலட்சியம் குறித்து அரசாங்கத்திற்கு புகார்கள் பல வருவதாக கூறப்படுகிறது.

தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்களின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்

காவல்துறையினரின் செயலற்ற தன்மை மற்றும் அலட்சியம் குறித்து அரசாங்கத்திற்கு புகார்கள் பல வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில காலங்களில்

தேச விரோத செயல்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக தரப்படும் புகார்கள் அதிகமாக வந்துள்ளன என்றும் எனினும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் காவலர்கள் அலட்சியம் காட்டுவதாகவும் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அரசியல் அழுத்தம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது ராணுவ படைகளுக்கு எதிராக மக்களை தூண்டுதலுக்கு உடந்தையாக இருக்கும் பணியில் உள்ள ஊழியர்களுக்கு எதிராக காவலர்கள் செயலற்று இருப்பதாக புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தின் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 1990 அரசு ஊழியர்கள் தேச விரோத வழக்கில் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.அரசியல் பலம் மற்றும் மற்ற ஊழியர்களின் 73 நாட்கள் தொடர்ந்த வேலைநிறுத்தம் காரணமாக தேச விரோத வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து ஊழியர்களுக்கும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டில் காவல் துறையைச் சேர்ந்தவர்களே கலகத்தில் ஈடுபட்ட பிறகு சுமார் 130 காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் தீயணைப்புத் துறை மற்றும் பிற துறைகளில் பணியில் அமர்த்தப்பட்டனர்.

பி.வி.ஆர் சுப்பிரமணியம் அவர்களின் தலமையில் செயல்படும் இந்த முக்கிய குழுவானது வரும் காலங்களில் தேசவிரோத செயல்களில் ஈடுபடும் ஊழியர்களின் மீது தக்க நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்யும் என ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் பலனாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக மக்களைத் தூண்டி தேசவிரோத செயல்களில் ஈடுபடுபடச் செய்பவர்கள் மீது எழும் புகார்கள்‌ மீது காவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Input Credits - OpIndia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News