Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க தலைவர்களின் வீட்டு மருமகள்கள் கூட ஹிந்தி சரளமாக பேசுவர் - ஆனால் தமிழக ஏழை மாணவர்கள்? - வைரலாகும் வீடியோ!

தி.மு.க தலைவர்களின் வீட்டு மருமகள்கள் கூட ஹிந்தி சரளமாக பேசுவர் - ஆனால் தமிழக ஏழை மாணவர்கள்? - வைரலாகும் வீடியோ!

தி.மு.க தலைவர்களின் வீட்டு மருமகள்கள் கூட ஹிந்தி சரளமாக பேசுவர் - ஆனால் தமிழக ஏழை மாணவர்கள்? - வைரலாகும் வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 12:40 PM GMT

மும்மொழி கொள்கையை தீவிரமாக எதிர்க்கிறேன் என்கிற பெயரில் மக்களை தவறான வழியில் மூளை சலவை செய்து ஹிந்தி கற்க விடாமல் செய்கிறது தி.மு.க. இதனால் அரசு பள்ளி மாணவர்களும், கிராமப்புரத்தில் இருந்து வரும் மாணவர்களும் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக நகரங்களை நோக்கி நகர்த்தும் போது ஹிந்தி தெரியாத காரணத்தால் ஒரு குறிப்பிட்ட இலக்கை தாண்டி அடைய முடியாமல் தேங்கி நிற்கின்றனர்.

ஆனால் தி.மு.க-வின் தலைவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகள், அவர்கள் குடும்பத்திற்கு வாழ வரும் மருமகள்கள், ஏன் வீட்டு வேலை செய்யும் ஆட்கள் கூட சகஜமாக மூன்று மொழியில் முக்கியமாக ஹிந்தியில் உரையாடுவர். அதனை கண்டு ஊரார் பிள்ளைகளை ஹிந்தி படிக்க விடாமல் செய்து தன் பிள்ளைகளை மட்டும் ஹிந்தி படிக்க வைத்த மிதப்பில் தி.மு.க தலைவர்கள் ஆனந்தமாக சிரிப்பர்.

அந்த வகையில் தி.மு.க-வின் பொருளாளரும், கட்சியின் முக்கிய தலைவரும், அடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு காத்துக்கொண்டு அதை இன்னமும் தராத ஸ்டாலின் மேல் கோபமாக இருக்கும் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் மனைவி ஹிந்தியில் சரளமாக பேசி வாக்கு சேகரிக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில் சரளமாக இந்தியில் ஒரு நபரிடம் பேசி தன் கணவருக்கு வாக்கு சேகரிக்குறார். ஊரார் பிள்ளைகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழியும் ஆனால் தன் பிள்ளைகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது என்கிற கபடவேஷதாரி கொள்கையை திராவிட முன்னேற்ற கழகம் கடைபிடித்து வருவதை எண்ணி மக்கள் 2021'ல் சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகுட்டுவர் என பரவலாக பேசப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News