நெற்றியில் ராமர் வடிவம் பொட்டு வைத்து "ஜெய் ஸ்ரீ ராம்" பற்றி தியானிப்போம் என என பதிவிட்டிருக்கிறார் நடிகை சுகன்யா..!
நெற்றியில் ராமர் வடிவம் பொட்டு வைத்து "ஜெய் ஸ்ரீ ராம்" பற்றி தியானிப்போம் என என பதிவிட்டிருக்கிறார் நடிகை சுகன்யா..!

அயோத்தியில் ராமர் கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. பூமி பூஜைக்கு வந்த பிரதமர் மோடி வெள்ளியாலான முதல் செங்கலை அடிக்கல் நாட்டினார். இந்திய வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பல்வேறு கிராம பக்தர்களும் ராம் என்று பெயரிடப்பட்ட செங்கற்களை அனுப்பி வைத்தனர்.இந்த செங்கல்கள் அனைத்தும் ராமர் கோவில் கட்டுவதற்காக பல ஆண்டுகளாக தவம் இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.மேலும் வசதி படைத்த பக்தர்கள் தங்கம்,வெள்ளி, செங்கற்கள் ஆகியவை கிலோ கணக்கிலும் அனுப்பி வைத்தனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க ராமர் பூமி பூஜை நன்றாக முடிந்ததையடுத்து ஸ்ரீராமரை நினைவுகூறும் வகையில்
நடிகை சுகன்யா அவர் நெற்றியில் ராமர் வடிவம் பொறிக்கப்பட்ட பொட்டை இட்டுக் கொண்டார்.அவர் சில பதிவுகளையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் ஸ்ரீ ராமை பற்றி தியானிப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் இது ஒரு சிறந்த அழகான திலகம் என்று பாராட்டி வருகின்றனர்.
Jai Shri Ram 🙏🏹⛳️Lets meditate on ShriRam🙏🐒 pic.twitter.com/bORpXUIMmP
— sukanya (@SukanyaActor) August 5, 2020