Kathir News
Begin typing your search above and press return to search.

மோடியின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்காக வரிசையில் நிற்கும் நிறுவனங்கள்.!

மோடியின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்காக வரிசையில் நிற்கும் நிறுவனங்கள்.!

மோடியின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்காக வரிசையில் நிற்கும் நிறுவனங்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:31 PM GMT

இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான மோடி அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சி இறுதியாக முடிவடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த மானிய உதவி (PLI) திட்டம் சிறந்த ஸ்மார்ட் போன் நிறுவனங்களிலிருந்து நேர்மறையான பதிலை பெற்றுள்ளது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் எந்த ஒரு சீன நிறுவனத்தின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. தென் கொரியாவின் சாம்சங் மற்றும் ஆப்பிளின் தைவானிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸகான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் போன்ற பெரிய நிறுவனங்கள் 6.6 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பதாரர் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களில் கூடுதல் விற்பனையைப் பொறுத்து ஊக்கத்தொகையை வழங்குவதற்கு மோடி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் 2019-20 முதல் தொடங்குகிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

பிரசாத் ட்விட் செய்ததாவது "மொத்தம் 22 நிறுவனங்கள் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கள் விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிறுவனங்கள் எதிர்வரும் 5 ஆண்டுகளில் ரூ 11.5 லட்சம் கோடி (153 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் பாகங்களை உற்பத்தி செய்யும். அவற்றில் ரூ 7 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்த மோடி அரசாங்கத்தின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் ஒரு பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகமாக்கபடும். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் 3,00,000 நேரடியாக உருவாக்கப்படும் மற்றும் 9,00,000 கூடுதலாக மறைமுகமாக உருவாக்கப்படும். இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக இருக்கவேண்டும் என்ற திட்டத்துடன் மோடி அரசு செயல்படுகிறது.

சீன உற்பத்தியாளர்களின் ஒன்பிளஸ், விவோ, ஓப்போ மற்றும் ரியல்மீ ஆகியவற்றை சந்தையிலிருந்து இருந்து வெளியேற்ற இது தகுந்த நடவடிக்கையாக அமையும். எந்த நாட்டிற்கும் எந்தவித விலக்கும் அளிக்காமல் பாதுகாப்பு மற்றும் முதலீடு தொடர்பான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டிய முதலீடு மற்றும் பாதுகாப்பு விதிகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன என்று பிரசாத் கூறினார்.

இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி துறையில் நுழைவது ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்கு மிகப்பெரிய வரமாகும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான வயர்லெஸ் சந்தாதாரர்கள் மற்றும் 350 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இன்னும் அடிப்படை வடிவமைப்பு கொண்ட தொலைபேசிகளையே நம்பி உள்ள நிலையில் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தரவர்க்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு போதுமான சந்தையை உருவாக்குகிறது.

ஆப்பிள் தனது உற்பத்தி திறனில் 20 சதவீதத்தை சீனாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. ஆப்பிள் ஐபோன் 11 உள்ளிட்ட சில கருவிகளை பாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் ஆப்பிளின் முன்னணி சப்ளையர்களில் ஒருவரான பெகாட்ரான் இந்தியாவில் இதுவரை ஒரு ஆலையைக் கூட நிறுவவில்லை. ஆனால் இந்தியாவில் உற்பத்தி வசதி அமைக்க பெகாட்ரான் பல மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக NDTV தெரிவித்துள்ளது. டெல்லியில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசாங்கத்தின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் தங்களுக்கு ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மற்றும் லாவா, டிக்சன்,மைக்ரோமேக்ஸ், ஆப்டிமல் எலக்ட்ரானிக்கல் ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டத்திற்காக விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி ஒரு படி மேலே சென்றுள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி ஆப்பிள், சாம்சங் மற்றும் உள்நாட்டு கைபேசி நிறுவனமான லாவாவின் மூத்த நிர்வாகிகளை சந்தித்தபோது இத்திட்டம் தொடங்கியது.

"உலகின் தொழிற்சாலை" என்ற செல்வாக்கு சீனாவிற்கு குறைந்து வருவதால் ஒவ்வொரு துறையிலும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News